2022ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.






ஆப்கானிஸ்தான் அணியை விட இலங்கை அணி அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது. இருப்பினும் இது டி20 போட்டி என்பதால் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்குமே உள்ளது. இலங்கை அணியை காட்டிலும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணி டி20 போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும் இலங்கை அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும்.


ஆப்கானிஸ்தான் அணிக்கு கேப்டன் முகமது நபி, ஹசரத்துல்ல ஷசாய், நஜிபுல்லா ஜட்ரான், குர்பாஸ் பேட்டிங்கில் அதிரடி காட்ட காத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலமாக ரஷீத்கான் உள்ளார். உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான ரஷீத்கான் உள்ளார். பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ரஷீத்கான் பேட்டிங்கிலும் ஆதிக்கம் செலுத்தினால் ஆப்கானிஸ்தான் அணிக்கு பக்கபலமாக அமையும்.




ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அசத்தியதைப் போல இந்த தொடரிலும் இலங்கை அசத்த விரும்பும் என்பதால் பேட்டிங்கில் கேப்டன் தசுன் சனகா, பதும் நிசங்கா, பனுகா ராஜபக்சே, அசலங்கா, தனஞ்செய டி சில்வா அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஆப்கானிஸ்தானுக்கு ரஷீத்கானைப் போல இலங்கை அணிக்கு ஹசரங்கா சுழலில் அசுரபலமாக உள்ளார். இலங்கை அணி சார்பில் இன்றைய போட்டி மூலம் மதிஷா பதிரானா மற்றும் தில்ஷான் மதுசனகா அறிமுகம் ஆகின்றனர்.  


ஆப்கானிஸ்தான் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். இலங்கை அணிக்கு பக்கபலமாக பந்துவீச்சில் பெர்னான்டோ, பதிரனா, துஷாரா ஆகியோர் உள்ளனர். இன்று 100வது டி20 போட்டியில் ஆடும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறுமா..? அல்லது இலங்கை அணி முதல் போட்டியிலே அசுர வெற்றியை பெறுமா..? என்பதற்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை கிடைக்கும்.


மேலும் படிக்க : Asia Cup 2022: ஆசிய சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? - இன்று தொடங்கும் கிரிக்கெட் திருவிழா


மேலும் படிக்க : Asia Cup, IND vs PAK: தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்! கோலியை எதிர்பார்க்கும் கிரிக்கெட் உலகம்! பாக் வீரர் ஆதரவு!