ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்கஸ் நார்த் 3 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பிராட் வீசிய பந்தை லெக் சைடு திசையில் இவர் கடத்த முற்பட்டார். அப்போது இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் டைவ் அடித்து சிறப்பான கேட்சை பிடித்து அசத்தினார். இந்த கேட்ச் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இந்த கேட்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். இன்றைய போட்டியில் கடைசியில் பட்லர் மார்னஸ் லபுசேன் கொடுத்த கேட்சை பிடிக்காமல் தவறவிட்டார். அது இன்று அவருக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சிறப்பான கேட்ச் ஒன்றை பிடித்தார். இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் முகமது சிராஜ் வீசிய பந்தை அலி போப் லெக் சைடு திசையில் அடித்தார். அதை விக்கெட் கீப்பர் பண்ட் சிறப்பாக டைவ் அடித்து பிடித்தார். தற்போது அந்த கேட்சையும் இந்த கேட்சையும் பலரும் தொடர்பு படுத்தி பேசி வருகின்றனர்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்,"ஸ்பைடர்மென் திரைப்படம் வெளியான நாளில் அதற்கு சிறப்பான சமர்ப்பணமாக இந்த கேட்ச் அமைந்துள்ளது. சிறப்பான கேட்ச்" எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: “நோ கமெண்ட்ஸ்” : டீல் பண்ண தெரியும்.. கோலி பேச்சுக்கு பதிலளித்த கங்குலி.