புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்திலே மார்கஸ் ஹாரிசின் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து டேவிட் வார்னரும், மார்னஸ் லபுசானே இணைந்து அபாரமாக ஆடினர். வார்னர் 95 ரன்கள் குவித்த நிலையில், பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.




இந்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித்தும், மார்னஸ் லபுசானேவும் ஆட்டத்தை இன்று தொடங்கினர். நேற்று 95 ரன்கள் எடுத்திருந்த மார்கஸ் லபுசானே இன்று சதம் அடித்து அசத்தினார். ஆனால், சதமடித்த சிறிது நேரத்தில் அவர் ராபின்சன் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிய அவர் 305 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்தார். 20வது டெஸ்டில் ஆடும் லபுசானேவிற்கு இது 6வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் 18 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் 2 ரன்களின் பென்ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.


மார்கஸ் லபுசானேவிற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்த நிலையில், மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்து அசத்தினார். மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 116 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்துள்ளது.




ஸ்டீவ் ஸ்மித் 55 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கு திரும்பியுள்ள ஆல்ரவுண்டர், 18 ஓவர்களில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேப்டன் ஜோ ரூட் 1 விக்கெட்டையும், ஸ்டூவர்ட் பிராட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.


முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டில் தனது கேப்டன் பதவியை டிம்பெய்ன் ராஜினாமா செய்த நிலையில், ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் கேப்டனாக முதன்முறையாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலக துணை கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டதுடன் அவருக்கும், டேவிட் வார்னருக்கும் ஒரு ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : PV Sindhu | உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 7-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறி சிந்து அசத்தல் !


மேலும் படிக்க : Pak Break India Record : இந்தியாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் - ரிஸ்வான்!


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண