இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணியுடன் வரும் 26-ந் தேதி அந்த நாட்டில் உள்ள செஞ்சூரியன் நகரின் மைதானத்தின் டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித்தொடர்களில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஆட உள்ளது.


இந்த தொடருக்கான விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று அதிகாலை இந்தியாவில் இருந்து விமானம் மூலமாக தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றது. அந்த நாட்டிற்கு நேற்று இரவு இந்திய அணி சென்றடைந்தது.






விமான பயணத்தின்போது இந்திய வீரர்கள் எடுத்த வீடியோவை பி.சி.சி.ஐ. தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  அந்த வீடியோவில் விமானத்தில் அமர்ந்திருக்கும் ரிஷப் பண்ட், இஷாந்த் சர்மா, விமானத்தில் அங்குமிங்கும் நடக்கும் விராட்கோலி ஆகியோர் உள்ளனர். இஷாந்த் சர்மா விராட்கோலியிடம் ஹிந்தியில் பேசுகிறார். ஸ்ரேயாஸ் அய்யரும், ராகுல் டிராவிட்டும் சிரித்துக் கொண்டே பேசி வருகின்றனர். பின்னர், விமானம் ஜோஹன்ஸ்பர்க் விமான நிலையத்தில் தரையிறங்குகிறது. தென்னாப்பிரிக்க சென்ற இந்திய அணியை அந்த நாட்டு சார்பில் நடனம் ஆடி, பாட்டுப்பாடி வரவேற்றனர்.





இந்திய வீரர்கள் அனைவரும் முழுமையாக முகத்தை மறைக்கும் கண்ணாடி முகக்கவசம் அணிந்து விமான நிலையத்தில் இருந்து வெளியேறுகின்றனர். விமானத்தில் ரஹானே, புஜாரா விமானத்தில் பறக்கிறோம் என்பது போல சைகை காட்டுகின்றனர். விமான நிலையத்தில் ஆடுபவர்களைப் போலவே ஸ்ரேயாஸ் அய்யரும் நடனம் ஆடுகின்றனர்.


ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் இடம்பிடித்திருந்த இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சல் அணியில் இடம்பிடித்துள்ளார்.


மேலும் படிக்க : Karnataka MLA Remarks: ‛தடுக்க முடியலையா... அனுபவியுங்கள்...’ பாலியல் வல்லுறவு பற்றி காங்., எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண