லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானன் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பேன் ஸ்டோக்ஸ் சதம் விளாசினார். 


டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சேசிஸிங் செய்யும் அணிக்காக ஐந்து சதங்கள் அடித்த யூனிஸ் கானுக்குப் அடுத்து அதிக டெஸ்ட் சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 


ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் தனது வெற்றிக்கணக்கை துவங்கிய நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. 


முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 371 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 50 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வளவு தான் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று விடும் என அனைவரும் கூறத் தொடங்கி விட்டனர். ஆனால் அதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை மீட்க ஆரம்பித்தனர். 






சிறப்பாக ஆடி வந்த பென் டக்கெட் 83 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் வந்த பேரிஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்தார். அதுவரை மிகவும் பொறுமையாக ஆடி வந்த ஸ்டோக்ஸ் அதன் பின்னர் ருத்ரதாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதாவது, தான் எதிர்கொண்ட முதல் 126 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்த ஸ்டோக்ஸ், அடுத்த 21 பந்தில் 46 ரன்கள் குவித்தார். அதில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் அடங்கும்.  


அதிரடியாக ஆடிய ஸ்டோக்ஸ் ஹாட்ரிக் சிக்ஸர் மூலம் சதத்தை நிறைவு செய்தார். மேலும் தொடர்ந்து ஆடிவரும் ஸ்டோக்ஸ் அணிக்கு நம்பிக்கையாக மாறியுள்ளார். இந்த போட்டியினை வென்று தர கேப்டனாக அவருக்கு  வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.