இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி ஜூன் 16 (இன்று) முதல்  நடைபெறவுள்ளது. இங்கிலாந்து பர்மிங்காவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கு இரு அணிகளும் முழுமையாக தயாராகியுள்ளது. 

ஆஷஸ் டெஸ்ட் தொடர்:

சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. மறுபுறம் அயர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் வெற்றிப்பாதையில் திரும்புகிறது. என்வே, இவ்விரு அணிகளும் இன்று மோதும் போட்டி விறுவிறுப்பாக இருக்கும். இந்தநிலையில், ஆஷஸ் தொடரில் இதுவரை அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலை இங்கே பார்க்கலாம். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே முதலிடத்தில் உள்ளார். 

முதலிடம் யார்?

ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்து அணியும் இதுவரை பலமுறை ஆஷஸ் தொடரில் மோதியுள்ளது. ஆனால், இதில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய முதல் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நான்கு பந்துவீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் 36 போட்டிகளில் 195 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் 11 முறை ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். க்ளென் மெக்ராத் இரண்டாவது இடத்தில் உள்ளார். 30 போட்டிகளில் 157 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹக் ட்ரம்புல் மூன்றாவது இடத்தில் உள்ளார். 141 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் ஐந்து இடங்களில் உள்ள ஒரே இங்கிலாந்து பந்துவீச்சாளர் பிராட் மட்டுமே. 35 போட்டிகளில் 131 விக்கெட்டுகளை வீழ்த்தி 4வது இடத்தில் உள்ளார். அவரை தொடர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த டென்னிஸ் லில்லி 128 விக்கெட்களை வீழ்த்தி 5வது இடத்தில் இருக்கிறார். 

பந்துவீச்சாளர்கள் போட்டிகள் இன்னிங்ஸ் விக்கெட்டுகள் சராசரி பொருளாதாரம் 5
ஷேன் வார்ன் (AUS) 36 72 195 23.25 2.52 11
கிளென் மெக்ராத் (AUS) 30 60 157 20.92 2.70 10
ஹக் ட்ரம்பிள் (AUS) 31 55 141 20.88 2.23 9
ஸ்டூவர்ட் பிராட் 35* 64 131 29.05 3.16 8
டென்னிஸ் லில்லி  (AUS) 24 47 128 22.32 2.45 7
இயன் போத்தன் (ENG) 32 58 128 28.04 2.97 7
பாப் வில்லிஸ் (ENG) 31 61 123 24.37 2.78 7
மான்டி நோபல்  (AUS) 39 66 115 24.86 2.48 9
ரே லிண்ட்வால்  (AUS) 29 51 114 22.44 2.28 6
ஜேம்ஸ் ஆண்டர்சன் (ENG) 35 64 112 33.76 2.95 5

ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள் 2021-2022 புள்ளிவிவரங்கள்:

எண் பந்துவீச்சாளர்கள் போட்டிகள் விக்கெட்கள் சராசரி பொருளாதாரம்
1 பாட்கம்மின்ஸ் (AUS) 8 21 18.04 2.99
2 மிட்செல் ஸ்டார்க்(AUS) 10 19 25.36 3.17
3 ஸ்கார் போலண்ட்(AUS) 6 18 9.55 2.12
4 மார்க் வுட்(ENG) 7 17 26.64 3.74
5 நாதன் லயன்(AUS) 10 16 23.56 2.31
6 கேமரூன் க்ரீன்(AUS) 10 13 15.76 2.54
7 பிராட் (ENG) 7 13 26.30 2.88
8 ஆலிவர் ராபின்சன்(ENG) 8 11 25.54 2.64
9 ஜேம்ஸ் ஆண்டர்சன்(ENG) 5 8 23.37 1.80
10 ஜாக் லீச்(ENG) 5 6 53.50 4.35