இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான வீரேந்திர சேவாக், தனது மகன் ஆரியவீர் டெல்லி அணிக்கான கூச் பிகார் டிராபியில் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை மூன்று ரன்களில் இழந்துள்ளார். மேலும தனது தந்தையின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை 22 ரன்கள் வித்தியாசத்தில் முந்தும் வாய்யை இழந்ததால், அவரது தந்தை சேவாக் தனது மகன் ஆரியவிர் ஃபெர்ராரி கார் வாங்கும் வாய்ப்பை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
வீரேந்திர சேவாக்:
இந்திய அணியின் அதிரடி வீரராக இருந்தவர் வீரேந்திர சேவாக். டி20 கிரிக்கெட் இல்லாத காலத்திலேயே இவர் அதிரடியாக சிக்சரும் பவுண்டரியுமாக விளாசுவார். அதே போல டெஸ்ட் போட்டியோ அல்லது ஒரு நாள் போட்டியோ பாராபட்சம் பார்க்காமல் தனதுன் அதிரடியை காட்டுவார். அன்றைய போட்டியில் அது சேவாக்கின் நாளாக மட்டும் இருந்திருந்தால் எதிரணி கேப்டனுக்கு தலைவலி தான், ஒற்றை ஆளாக எதிரணியை தூக்கி சாப்பிட்டுவிட்டு போட்டியின் போக்கையே மாற்றிவிட்டு செல்லும் அளவுக்கு அவரது ஆட்டம் இருக்கும். அந்த வகையில் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் கூச் பெஹர் கோப்பையில் முச்சதம் அடிக்கும் வாய்ப்பை மூன்று ரன்களில் இழந்தார்.
சேவாக் மகன் ஆர்யவீர்:
அதிரடி மன்னன் சேவாக தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவாகவும் ஊக்கமாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் டெல்லி அணி மேகாலயா அணிக்கு எதிராக கூச் பெஹர் கோப்பையில் விளையாடினர் அப்போது ஆர்யவிர் சேவாக் மற்றும் சக தொடக்க ஆட்டக்காரர் அர்னவ் புக்கா ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 180 ரன்களை சேர்த்தனர். அர்னவ் விக்கெட்டுக்கு பிறகும் ஆர்யவிர் தனது அதிரடியை தொடர்ந்தார். தன்யா நக்ராவுடன் மற்றொரு பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தார் ஆர்யவிர். இருவரும் நான்காவது விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தனர்,ஆர்யவிர் துரதிருஷ்டவசமாக 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். வெறும் மூன்று ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார் ஆர்யவீர் சேவாக். ஆர்யவீரின் இந்த அதிரடி ஆட்டத்தில் 34 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். மேலும் தனது இரட்டை சதத்தை வெறும் 229 பந்துகளில் அடைந்தார்.
தந்தை சேவாக் பாராட்டு:
தனது மகனின் அதிரடி ஆட்டத்துக்கு சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"நன்றாக விளையாடினார் ஆர்யவீர் சேவாக். ஆனால் 23 ரன்களில் வித்தியாசத்தில் உங்கள் ஃபெராரியை இழந்துவிட்டீர்கள். ஆனால் நன்றாகச் விளையாடினீர்கள், இந்த நெருப்பை அப்படியே உயிருடன் வைத்திருக்கவும், மேலும் பல சதங்கள் மற்றும் இரட்டை மற்றும் முச்சதங்களை நீங்கள் அடிப்பீர்கள் என்று அவர் தனது ட்வீட்டில் தனது மகனை பாராட்டி எழுதியுள்ளார்.