சாலை விபத்தில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், அந்த அணியின் ஆலோசகராக இணைந்துள்ளார்.


இங்கிலாந்து - நியூசிலாந்து மோதல்:


உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 4 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. அதைதொடர்ந்து, 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வரையிலான இந்த தொடரில், உள்ளூரிலேயே இங்கிலாந்து  தோல்வியுற்றது அணி நிர்வாகத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


பொதுவெளியில் தோன்றிய ஆண்ட்ரூ பிளின்டாஃப்..!


இந்நிலையில் தான், நியூசிலாந்து உடனான தொடருக்காக இங்கிலாந்து அணியின் ஆலோசகராக, முன்னாள் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சோபியா கார்டனில் உள்ள மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டபோது பிளிண்டாஃப் உடன் இருந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக நடந்த விபத்திற்குப் பிறகு முதன்முறையாக தற்போது தான் அவர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். மூக்கு, வாய்ப்பகுதிகளில் இன்னமும் காயங்களில் தழும்பு அப்படியே தெரிகிறது. மேலும், பிளிண்டாஃபின் முகமே மொத்தமாக மாறி, வேறு விதமாக காட்சியளிக்கிறது. அடையாளம் காண முடியாத அளவிற்கு அவரது முக அமைப்பு மாற்றம் கண்டுள்ளது. இதைகண்ட ரசிகர்கள் பலரும், பிளிண்டாஃப் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






விபத்தில் சிக்கிய ஆண்ட்ரூ பிளின்டாஃப்..!


இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரூ பிளின்டாஃப், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனியார் தொலைக்கட்சிக்கா டப் கியர் எனும் நிகழ்ச்சியில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது ஏற்பட்ட விபத்தில் முகத்தில் படுகாயமடைந்த பிளின்டாஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர காயமடைந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் அவர் இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்துள்ளார்.


மேலும் படிக்க: Temples History: மதத்தின் அடையாளம் மட்டுமா கோயில்கள்? சனாதனத்தின் நீட்சியா? உண்மையான நோக்கம் என்ன?


கிரிக்கெட்டில் பிளின்டாஃப்:


இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் மற்றும் 141 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஆண்ட்ரூ பிளின்டாஃப், கடந்த ஆண்டு சர்ரேயில் உள்ள டன்ஸ்ஃபோல்ட் ஏரோட்ரோமில் டாப் கியர் படப்பிடிப்பின் போது விபத்தில் முகத்தில் காயம் அடைந்தார். 2007ம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. அப்போது யுவராஜ் சிங் மற்றும் பிளின்ட் ஆஃப் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, வீசப்பட்ட ஓவரில் தான் 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி யுவராஜ் சிங் உலக சாதனை படைத்தார்.