தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் களமிறங்கவில்லை.  


இதையடுத்து, எஞ்சிய 2 போட்டிகளில் தீபக்சாஹர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ. வெளியிட்ட அறிவிப்பில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தீபக்சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.






ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர் ( துணைகேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஷபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ்கான், சிராஜ், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய அணி தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் ராஞ்சி மைதானத்தில் நாளை மோத உள்ளது. இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டெல்லியில் வரும் 11-ந் தேதி தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது.


வாஷிங்டன் சுந்தர் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 விக்கெட்டுகளையும், 4 ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும், 31 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். பேட்டிங்கிலும் முக்கியமான தருணத்தில் வாஷிங்டன் சுந்தர் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்துவதில் வல்லவர். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 57 ரன்களையும், 31 டி20 போட்டிகளில் 47 ரன்களையும், டெஸ்ட்டில் 265 ரன்களையும் விளாசியுள்ளார்.


மேலும் படிக்க : Deepak Chahar: ஒருநாள் தொடரில் இருந்து விலகுகிறாரா தீபக் சாஹர்? இதுதான் காரணமா?


மேலும் படிக்க : சிலை இருக்கு தோனி எங்கே..? தோனிக்காக வைக்கப்பட்ட மெழுகு சிலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்!