ரோஹித் ஷர்மாவின் தலைமையின் கீழ் நான் விளையாடுவது அதிர்ஷ்டமான ஒன்று என இந்திய அணியின் இளம் வீரர் ஆகாஷ் தீப் கூறியுள்ளார்.
ரோஹித் தலைமையில் விளையாடுவது அதிர்ஷ்டம்:
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப். இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல், தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் களம் இறங்கி உள்ளார்.
இச்சூழலில் தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா குறித்து ஆகாஷ் தீப் பேசியுள்ளார். அதில்,"ரோஹித் ஷர்மாவின் தலைமையின் கீழ் நான் விளையாடுவது அதிர்ஷ்டமான ஒன்று. அதனால் அவரின் தலைமையின் கீழ் விளையாடுவதை நான் எப்போதும் அதிர்ஷ்டம் என்று தான் கூறுவேன். அவர் மிகவும் வித்தியாசமான ஒரு கேப்டன். நான் விளையாடியதில் அவரே மிகச் சிறந்த கேப்டன். ரோஹித் ஷர்மா மிகவும் கூலான இயல்பான ஒரு மனிதராக கேப்டனாக களத்தில் இருப்பார்.
ஒரே மாதிரி நடத்துவார்:
அவர் எனக்கு மட்டும் கிடையாது ஒவ்வொரு வீரருக்கும் எளிமையான விஷயங்களை வைத்திருப்பார். எல்லா வீரர்களையும் அவர் சமமாக ஒரே மாதிரி நடத்துவார்.
மேலும் கேப்டன் போல இல்லாமல் ஒரு நண்பன் போல இருப்பார். ஒரு சகோதரர் போல நடந்து கொள்வார். என்னுடைய முதல் சர்வதேச விக்கெட் நோ-பால் ஆக அமைந்தது. அந்த சம்பவத்தின் போது ரோஹித் ஷர்மா என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். அதே சமயத்தில் என்னிடம் இது போன்ற விஷயங்கள் யாருக்கும் நடக்கவே செய்யும், ஆனால் நீங்கள் நோபால் போன்ற விஷயங்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஒரு பவுலராக இப்படியான விஷயங்களை மறந்து விடக்கூடாது என்றார்"என ஆகாஷ் தீப் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Ashwin on Bumrah: இந்தியாவின் கோகினூர் வைரம் - பும்ராவை தவிர வேற யாராவது இருக்கிறார்களா? அடித்துச் சொல்லும் அஸ்வின்