”எனக்கு PR கிடையாது” ஆனால் இது தான் எனக்கு முக்கியம்.. அஜின்கியா ரகானே நம்பிக்கை

Ajinkya Rahane : இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரகானே ஜூலை 2023 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடினார்.

Continues below advertisement

கிட்ட தட்ட இரண்டு வருடங்களாக இந்திய அணியில் இருந்து விலகி இருந்தாலும், மீண்டும் அணிக்கு திரும்புவதே தனது குறிக்கோள் என்று இந்திய அணி வீரர் அஜிங்கியா ரகானே தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

அஜிங்கியா ரகானே: 

இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரரான அஜிங்க்யா ரகானே ஜூலை 2023 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக கடைசியாக விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார், இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் 437 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த வாரம் ஹரியானாவுக்கு எதிரான மும்பையின் காலிறுதிப் போட்டியில், ரஹானே 31 மற்றும் 108 ரன்கள் எடுத்து நடப்பு சாம்பியன்களை 152 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெறவும், அரையிறுதிப் போட்டியில் இடம் பெறவும் உதவினார்.

இதையும் படிங்க: IPL 2025 CSK vs RCB: புதிய பகையாளிகள் ஆர்சிபி vs சிஎஸ்கே! எப்போது மேட்ச்? எங்கு நடக்கிறது?

”இந்திய அணிக்கு திரும்புவேன்” :

இந்த நிலையில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதற்கான நெருப்பு தன்னுள் இருப்பதாக ரகானே பேசியிருந்தார். மேலும் "நான் அதிக அனுபவம் வாய்ந்தவன், ஆனால் இன்னும் இளமையாக உணர்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்  அளவுக்கு நான் உடற்தகுதியுடன் இருக்கிறேன். நான் ஆர்வமாக உள்ளேன், இந்த விளையாட்டை விரும்புகிறேன், சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. எனது விளையாட்டில் நான் ஒருபோதும் திருப்தி அடைவதில்லை, எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. இந்திய அணிக்ககாக விளையாட வேண்டும் என்ற நெருப்பு இன்னும் எனக்குள் எரிந்து கொண்டிருக்கிறது. எனக்குள் இன்னும் கிரிக்கெட் மீதம் இருப்பதாக உணர்கிறேன்," என்று ரஹானே கூறினார்.

இதையும் படிங்க: MI IPL 2025 full schedule: சிஎஸ்கேவின் பங்காளி, கேப்டனாகும் ரோகித் - மும்பை அணியின் மொத்த போட்டி, மைதான, நேர விவரங்கள்

எனக்கு PR இல்லை:

"நான் எப்போதும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன்; இப்போது மனம் திறந்துவிட்டேன். கிரிக்கெட் விளையாடி வீட்டிற்குச் செல்வதில்தான் என் கவனம் இருந்தது. சில விஷயங்கள் இனிமேல் தேவைப்படும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. இன்றும், சில சமயங்களில் நான் கிரிக்கெட்டைப் போலவே உணர்கிறேன்.  என் கடின உழைப்பைப் பற்றிப் பேச வேண்டும் என்று என்னிடம் கூறப்படுகிறது. நீங்கள் செய்திகளில் இருக்க வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள்... எனக்கு ஒரு PR குழு இல்லை; எனது ஒரே PR எனது கிரிக்கெட் மட்டும் தாம். அது தான் செய்திகளில் இருப்பது முக்கியம் என்பதை நான் இப்போது உணர்ந்துள்ளேன். இல்லையெனில், நான் வட்டத்திற்கு வெளியே இருக்கிறேன் என்று மக்கள் நினைக்கிறார்கள்," என்றார் ரகானே

Continues below advertisement
Sponsored Links by Taboola