ஆசிய கோப்பையில் வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டி நேற்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. குறிப்பாக, வங்காளதேசம் வெற்றியின் விளிம்பில் இருந்தபோது ஆப்கானிஸ்தான் அணியில் நஜிபுல்லா ஜட்ரான் காட்டிய அதிரடி வங்கதேச ரசிகர்களுக்கு கெட்ட கனவாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.
62 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் அணிக்காக களமிறங்கிய ஜட்ரான் களமிறங்கியபோது ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 7 ஓவர்களில் 62 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்திருந்த ஜட்ரான், கடைசியில் 17 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஜட்ரான் நேற்றைய போட்டியில் 6 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம், அவர் புதிய சாதனை ஒன்றை படைத்தார். அதாவது, டி20 போட்டிகளில் டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை நஜிபுல்லா ஜட்ரான் படைத்தார். இதற்கு முன்பு இந்த சாதனையை தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தன் வசம் வைத்திருந்தார்.
அவர் டெத் ஓவர்களில் 47 சிக்ஸர்களை விளாசியுள்ளார். நேற்றைய போட்டியில் 6 சிக்ஸர் விளாசியதன் மூலம் ஜட்ரான் 53 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். மூனறாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி 46 சிக்ஸர்களுடன் உள்ளார். நான்காவது இடத்தில் 41 சிக்ஸர்களுடன் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் உள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி டி20 போட்டிகளில் அசுர பலம் வாய்ந்த அணியாக திகழ்வதற்கு நஜிபுல்லா ஜட்ரானும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 29 வயதான ஜட்ரான் 80 டி20 போட்டிகளில் ஆடி 8 அரைசதங்களுடன் 1532 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 99 பவுண்டரிகள், 85 சிக்ஸர்கள் அடங்கும். 79 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் 14 அரைசதங்களுடன் 1849 ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் படிக்க : BAN vs AFG, Match Highlights: பயம் காட்டிய பங்களாதேஷ்.. மாஸ் காட்டி சூப்பர் 4ல் நுழைந்த ஆஃப்கானிஸ்தான்..!
மேலும் படிக்க : Asia Cup 2022: ஆசிய கோப்பை:ஹாங்காங் போட்டிக்கு முன்பாக ஜிம்மில் கெத்து காட்டும் விராட்... வைரல் படங்கள்..!