NED vs AFG ODI World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (நவம்பர் 3) நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.


இதில் முதலில் களமிறங்கிய  நெதர்லாந்து அணி 46. 3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 31. 3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


வெற்றியை மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்:


இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய அந்த அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, ” நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம், தொடர்ந்து மூன்றாவது முறையாக சேஸிங்கை அடைந்தோம். அது பெருமையாக உள்ளது. இந்த உலகக் கோப்பையில் நாங்கள் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுகிறோம்.


மூன்று மாதங்களுக்கு முன்னர் நான் எனது தாயை இழந்தேன். எனவே நாங்கள் அரையிறுதிக்கு செல்வது எனக்கும், எனது குடும்பத்திற்கும் பெரிய ஆறுதலாக இருக்கும்” என்று கூறினார். 


தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் அனைவரும் அரையிறுதிக்கு செல்வதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். நாங்கள் அகதிகள் முகாம்கள் மற்றும் முகாம்களில் மக்கள் எவ்வாறு இடம்பெயர்கிறார்கள் என்பதை நேரில் பார்த்து வருகிறோம். எங்கள் எண்ணங்கள் அவர்களுடன் உள்ளன. இந்த வெற்றியை நான் எங்கள் மக்களுக்கு அர்பணிக்கிறேன்," என்று ஷாஹிடி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.