AFG vs SL LIVE Score: ஆப்கானிஸ்தான் அபார வெற்றி - புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்
AFG vs SL LIVE Score, World Cup 2023: ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான உலகக் கோப்பை போட்டியின் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
கேப்டன் ஷாஹிதி 58 ரன்கள், உமர்சாய் 73 ரன்கள் குவித்ததோடு, இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 111 ரன்களை சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
45.2 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய உமர்சாய் 50 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி அரைசதம் கடந்தார்.
39.5 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 200 ரன்களை எட்டியுள்ளது
38 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 188 ரன்களை குவித்துள்ளது.
33 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 153 ரன்களை சேர்த்துள்ளது.
28 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை சேர்த்துள்ளது.
இரண்டாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஹ்மத் ஷா பொறுப்பாக விளையாடி, 74 பந்துகளில் 62 ரன்களை சேர்த்த நிலையில், ரஜிதா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
22 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 87 ரன்களை சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 83 ரன்களை சேர்த்துள்ளது
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாட்ரன் 57 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்து இருந்தபோது, மதுஷங்கா பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
ரன் ஏதும் எடுக்காமலேயே ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டை இழந்த நிலையில், ஜாட்ரன் மற்றும் ஷா கூட்டணி 72 ரன்களை சேர்த்து விளையாடி வருகிறது.
13 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 60 ரன்களை சேர்த்துள்ளது.
முதல் 10 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்களை சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 27 ரன்களை சேர்த்துள்ளது
ஆப்கானிஸ்தான் அணி 3 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்களை சேர்த்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான குர்பாஸ் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல், மதுஷங்கா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 240 ரன்களுக்கு ஆல் -அவுட் ஆனது
இலங்கை அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த மேத்யூஸ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த அணி தற்போது 9 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்களை சேர்த்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த தீக்ஷனா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி வரும் தீக்ஷனா தற்போது வரை 28 ரன்களை சேர்த்துள்ளார்.
44 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை சேர்த்துள்ளது
சமீரா ஒரு ரன் எடுத்து இருந்தபோது ரன் -அவுட் முறையில் ஆட்டம்கிழந்தார்
28 பந்துகளில் 22 ரன்களை சேர்த்த அசலன்கா, ஃபரூக்கி பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்
38 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 180 ரன்களை சேர்த்துள்ளது.
100வது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் ரஷீத் கானின் பந்துவீச்சில், டி சில்வா கிளீன் போல்டானார்.
35 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை சேர்த்துள்ளது.
33 ஓவர்கள் முடிவில் இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை சேர்த்துள்ளது.
31.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 150 ரன்களை எட்டியது
நிதானமாக விளையாடி வந்த சமர விக்ரமா 40 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து இருந்தபோது, முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
நிதானமாக ஆடி வந்த மெண்டிஸ் 39 ரன்கள் சேர்த்து இருந்தபோது, முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 125 ரன்கள் சேர்த்துள்ளது.
23 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை 115 ரன்களை சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களை சேர்த்துள்ளது.
பொறுப்புடன் விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரரான நிசாங்கா, 46 ரன்கள் சேர்த்து இருந்த போது ஒமர்சாய் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
17 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 81 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரரான நிசாங்கா தற்போது வரை 55 பந்துகளில் 44 ரன்களை சேர்த்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர விரரான ரஷீத் கான், இன்று களமிறங்கியதன் மூலம் தனது 100வது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார்.
14 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களை சேர்த்துள்ளது
ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக்கீம்.
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்/கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹிஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, துஷ்மந்த சமீர, தில்ஷன் மதுஷங்க.
புனேயில் நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் விளையாடும் பதினொன்றில் ஆப்கானிஸ்தான் மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி, நூர் அஹமதுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Background
2023 உலகக் கோப்பையின் 30வது ஆட்டம் புனேவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2ல் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையும் ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இருவரும் தலா புள்ளிகளுடன் உள்ளனர். இப்போது புனேயில் நடக்கும் ஆட்டத்தில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் பதினொன்றிலும் அணிகள் மாற்றங்களைச் செய்யலாம். கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதேசமயம் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இலங்கை அணி விளையாடும் பதினொன்றில் ஏஞ்சலோ மேத்யூஸை உள்ளடக்கியது. இந்த போட்டியிலும் அவருக்கு அணி வாய்ப்பு அளிக்கலாம். மேத்யூஸின் அனுபவம் இலங்கைக்கு சாதகமாக அமையும். பாத்தும் நிசாங்க மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு அணி தொடக்க வாய்ப்புகளை வழங்க முடியும். சதீர சமரவிக்ரமவும் அணியில் இடம்பெறலாம்.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் இதுவரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அந்த அணி கடந்த போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டிகளும் ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானவை. அந்த அணி தற்போது இலங்கையுடன் போட்டியிட தயாராக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி குர்பாஸ் மற்றும் இப்ராகிம் சத்ரானுக்கு தொடக்க வாய்ப்புகளை வழங்க முடியும். இக்ராம், முகமது நபி ஆகியோரும் விளையாடும் பதினொன்றில் இடம் பெறலாம்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான சாத்தியமான வீரர்கள் -
இலங்கை: பதும் நிசாங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய் டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மகிஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, துஷ்மந்த சமீரா, தில்ஷன் மதுஷங்க.
ஆப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நூர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -