AFG vs NED Innings Highlights: உலகக் கோப்ப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், நெதர்லாந்து அணி 179 ரன்களை சேர்த்தது.


நெதர்லாந்து - ஆப்கானிஸ்தான் மோதல்:


உலகக் கோப்பையின் 34வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகனா மைதானத்தில் நடைபெறுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதுவரை விளையாடிய 6 லீக் போட்டிகளில் தலா 3 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள நெதர்லாந்து எதிர்கொண்டுள்ளது.


ஆரம்பம் அதிரடி:


நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரானவெஸ்லே வெறும் ஒரு ரன்னிலேயே பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ் ஓ`டவுட் மற்றும் ஆக்கர் மேன் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினார். இந்த கூட்டணியின் ஆட்டத்தால் 10 ஓவர்கள் முடிவில் 66 ரன்களை சேர்த்தது. இதனால் நெதர்லாந்து அணி தொடர்ந்து வலுவாக ரன் சேர்த்து வந்தது.


அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்:


இந்த கூட்டணி 70 ரன்களை சேர்த்த நிலையில் 42 ரன்கள் சேர்த்து இருந்த, மேக்ஸ் ஒ`டவுட் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆக்கர்மேன் 23 ரன்களில் நடையை கட்டினார்.  கேப்டன் எட்வர்ட்ஸ் எதிர் பாராத விதமாக, முதல் பந்திலேயே ரன் -அவுட் முறையில் டக் அவுட் ஆனார். பிறகு லீடே, சாகிப் மற்றும் பீக் ஆகியோரும் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஆர்யன் தத் 10 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


நம்பிக்கை தந்த அரைசதம்:


ஒருபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் எங்கல்பிரெக்ட் மற்றும் நிலைத்து நின்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் விளாசிய அவர் 58 ரன்கள் சேர்த்து இருந்தபோது எதிர்பாராத விதமாக ரன் -அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு கூட்டணி சேர்ந்த வாண்டர் மெர்வ் மற்றும் ஆர்யன் தத் ஆகியோர் விக்கெட் இழப்பை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் வாண்டர் மெர்வ் 11 ரன்களில் வெளியேற, மீக்ரான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.


ஆப்கானிஸ்தானுக்கு ரன்கள் இலக்கு:


இறுதியில் 46.3 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முகமது நபி 3 விக்கெட்டுகளையும், நூர் அஹ்மது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். நெதர்லாந்து அணி வீரர்கள் 3 பேர் ரன் - அவுட் முறையில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணி நிர்ணயித்த இலக்கை எட்டி ஆப்கானிஸ்தான் அணி வெல்லுமா, அரையிறுதிக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.