AFG vs IRE: ஆப்கானிஸ்தானை பஞ்சர் செய்த அயர்லாந்து அணி.. ஆதிக்கத்தை தக்க வைத்த கொண்ட சம்பவம்!

அயர்லாந்து அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாவிட்டாலும், அதிரிபுதிரியான வெற்றியை பதிவு செய்தது. 

Continues below advertisement

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பயங்கரமாக ‘பஞ்சர்’ செய்தது அயர்லாந்து அணி. ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதன்மூலம், டெஸ்ட் போட்டியை தொடர்ந்து அயர்லாந்து அணி தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொண்டது. அயர்லாந்து அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாவிட்டாலும், அதிரிபுதிரியான வெற்றியை பதிவு செய்தது. 

Continues below advertisement

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டது. இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் சிறப்பான பேட்டிங் வரிசை கொண்டிருந்ததால் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்று தோன்றியது. ஆனால், அயர்லாந்து அணி பந்து வீச்சாளர்கள் அதற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை. இறுதியாக அயர்லாந்து அணி 18.4 ஓவரில் 111 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தானை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது. 

போட்டி சுருக்கம்: 

150 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தானின் தொடக்கம் மிகவும் மோசமாகவே இருந்தது. ஆப்கானிஸ்தான் அணி இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ரஹ்மானுல்லா குர்பாஸ் (0) விக்கெட்டை இழந்தது. பின்னர் இரண்டாவது ஓவரின் நான்காவது பந்தில் செதிகுல்லா அடல் (1) அவுட்டாகி வெளியே, அதற்கு அடுத்த பந்திலேயே அஸ்மத்துல்லா ஓமர்சாய் போல்ட் ஆகி கோல்டன் டக் ஆனார். 

பின்னர் சிறிது நேரம் இன்னிங்ஸை மீட்கும் பணியில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் ஏழாவது ஓவரில் நல்ல இன்னிங்சை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆப்கானிஸ்தான் வீரர் முகமது இஷாக் தனது விக்கெட்டை விட்டுகொடுத்தார். இஷாக் 22 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 9வது ஓவரில் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 1 பவுண்டரி உதவியுடன் 16 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த இப்ராஹிம் சத்ரான் ஐந்தாவது விக்கெட்டாக தனது விக்கெட்டை இழந்தார். 

அடுத்ததாக, 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்திருந்த அகமதுசாய் அஜாஸ் 13வது ஓவரின் ஐந்தாவது பந்தில் விக்கெட்டை விட்டுகொடுக்க, அதன்பின் அடுத்த பந்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார் நஞ்செலியா கரோட். இதன்பின், 15வது ஓவரில், நட்சத்திர ஆல்ரவுண்டர் முகமது நபி 21 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து 17வது ஓவரில் கேப்டன் ரஷித் கான் (5) அவுட்டாக, 10வது விக்கெட்டாக 13 ரன்கள் எடுத்திருந்த நவீன் உல் ஹக் 19வது ஓவரில் வெளியேறினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

அசத்திய அயர்லாந்து பந்துவீச்சாளர்கள்: 

அயர்லாந்து சார்பில் பெஞ்சமின் ஒயிட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.  இதுதவிர ஜோசுவா லிட்டில் 3 விக்கெட்டுகளையும், பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்களையும், மார்க் அடேர் 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். 

 

Continues below advertisement