ரிஷப் பண்ட் குறித்த கேள்விக்கு அவரது முன்னாள் காதலி ஊர்வசி ரவுடேலா பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்:


இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவை காதலித்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியது. அதோடு சமூக வலைதளங்களிலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து பதிவுகளை வெளியிட்டுவந்தனர். இதனிடையே கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்து வந்தார் ரிஷப் பண்ட்அந்த நேரத்தில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கினார்.


பின்னர் ஒன்றரை வருடங்களாக பல்வேறு விதமான சிகிச்சைகளை மேற்கொண்டு மீண்டு வந்தார். இதனிடையே காயம் கரணமாக முக்கியமான போட்டிகளான உலகக் கோப்பை போட்டியை தவறவிட்டார். இந்நிலையில் தான் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார் ரிஷப் பண்ட்


ஊர்வசி ரவுடேலா சொன்ன வார்த்தை:






இந்நிலையில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா பேட்டி ஒன்றில் பங்கு பெற்ற போது ரிஷப் பண்ட் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதாவது ஊர்வசி ரவடேலாவிடம் "நீங்கள் ரிஷப் பண்ட்டை திருமணம் செய்து கொள்வீர்களா? அவர் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வார்" எனக் கூறி இருந்தார் ஊர்வசி ரவுடேலா


அந்தக் கேள்விக்கு பதில் அளித்த ஊர்வசி ரவுடேலா, "நோ கமெண்ட்ஸ்" எனக் கூறி விட்டார். அதாவது தான் பதில் அளிக்க விரும்பவில்லை என் ஊர்வசி சொல்லி விட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்


 


மேலும் படிக்க: T20 World Cup 2024: இந்தியரின் தலைமையின் கீழ் அமெரிக்க டி20 உலகக் கோப்பை அணி.. இத்தனை இந்தியர்களுக்கு அணியில் இடமா..?


மேலும் படிக்க: IPL 2024: முள்படுக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ்.. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற என்ன செய்ய வேண்டும்..?