1983-ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை வைத்து 83 படம் தயாராகி உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியாகி கிரிக்கெட், சினிமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. படம் வருகிற டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் பிஸியாக இருக்கும் ஸ்ரீகாந்த்தான், 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஒரே தமிழக வீரர். 


இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரீகாந்த்துக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து, 83 திரைப்படம் சார்பாகவும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர் ஜீவா, 83 திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அதனால், ஸ்ரீகாந்த்தின் பிறந்தநாளையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.









அதில், ”இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சார். லவ் யூ. எப்போதும் பாஸிடீவ் எனர்ஜி தருவதற்கு நன்றி சார்” என கேப்ஷனிட்டு பதிவிட்டிருக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ப்ரைவெட் பார்டியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ், கவாஸ்கர், ரோஜர் பின்னி ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீகாந்த்துக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கின்றனர்.






‘சீக்கா’ என செல்லமாக அழைக்கப்படும் ஸ்ரீகாந்த், இந்திய அணிக்காக 189 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 6153 ரன்கள் குவித்திருக்கிறார். ஒரு உலகக்கோப்பையை வென்றிருக்கிறார். கிரிக்கெட் பேட்டிங்கில் சரவெடியாக இருந்தவர், இப்போது கிரிக்கெட் வர்ணனையிலும் சரவெடியாய் பேசுபவர். ‘மூக்கு மேல ராஜா’ இவரது டிரேட்மார்க் பஞ்ச். இந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி அன்று தனது 62வது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துகள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண