Asia Cup: பாகிஸ்தான் சொன்ன ஐடியா.. சம்மதம் சொல்லப்போகும் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம்..?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் சொன்ன பரிந்துரைக்கு, ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் ஒப்புதல் தரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் சொன்ன பரிந்துரைக்கு ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் ஒப்புதல் தரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 17ம் தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் கடந்த 2013ம் ஆண்டுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கோ, நமது அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவில்லை. ஆசியகோப்பை மற்றும் உலகக்கோப்பை போன்ற ஐசிசி சார்பில் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அந்த வகையில் தான், நடப்பாண்டிற்கான ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவித்த உடனேயே, இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லாது என பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டது.  

பாகிஸ்தான் சொல்லும் ஆலோசனை:

இது பெரும் பேசுபொருளான நிலையில் இருநாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்களும், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்நிலையில், எந்தவித பிரச்னையும் இன்றி ஆசியகோப்பை தொடரை நடத்தி முடிக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்திற்கு பரிந்துரை ஒன்றை வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவை தவிர மற்ற அணிகள் விளையாடும் அனைத்து போட்டிகளும், பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்படும். ஒருவேளை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அதுவும் இலங்கயிலேயே நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் ஒப்புதல்?

பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனம் வழங்கிய இந்த பரிந்துரையை, ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் பரிசீலித்த நிலையில், அதற்கு ஒப்புதல் தர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வார தொடக்கத்தில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. அவ்வாறு உறுதியானால், கடந்த 2008ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக, ஆசிய கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைக்கும்.

பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு ஏன்?

2009-ஆம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு பாகிஸ்தான் மண்ணில் எந்த சர்வதேச போட்டிகளும் நடத்தப்படவில்லை.  பாகிஸ்தான் அணி மீதான பார்வை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. இதன் காரணமாக அண்மையில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அண்மையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்றன. பாகிஸ்தான் மேற்கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அந்த அணிகள் மகிழ்ச்சியும் வெளிப்படுத்தின. ஆனாலும் இந்திய அணி மட்டும் தற்போது வரை பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்து வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola