ஒரே ஓவரில் 6 விக்கெட் வீழ்த்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


கிரிக்கெட் விளையாட்டில் களத்திலும் ஆட்டத்திலும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நடைபெறும். அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அதாவது ஒரே ஓவரில் ஒரு அணி 6 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 


நேபால் நாட்டின் ப்ரோ கிளப் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் புஷ் ஸ்போர்ட்ஸ் டெல்லி மற்றும் மலேசியா லெவன் அணிகளுக்கு எதிரான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 19ஆவது ஓவரின் முடிவில் புஷ் ஸ்போர்ட்ஸ் அணி 131 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்தது. அப்போது ஆட்டத்தின் 20ஆவது ஓவரை மலேசியா லெவன் அணியின் விரந்தீப் சிங் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை வைடாக வீசினார். 






அதன்பின்னர் அந்த ஓவரின் அனைத்து பந்துகளிலும் விக்கெட் விழுந்தது. அதில் ஒரு ஹாட்ரிக் மற்றும் ஒரு ரன் அவுட் என மொத்தமாக 6 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தினார். கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் 6 பந்துகளில் 6 விக்கெட் விழுவது இது இரண்டாவது முறையாகும்.


முதல் முறை 6 பந்தில் 6 விக்கெட் எப்போது தெரியுமா?


இதற்கு முன்பாக 1951ஆம் ஆண்டு நடைபெற்ற தாமஸ் ஹண்டர் கப் தொடரில் ஒரே ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தப்பட்டது. 1951ஆம் ஆண்டு ரவ்லெண்ட் யூனைடேட் மற்றும் ராயல் யார்க்‌ஷேர் ரெஜிமெண்டல் அசோஷியேசன்(ஆர்.டபிள்யூ.ஆர்.ஏ) அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆர்.டபிள்யூ.ஆர் அணி 3 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ரவ்லெண்ட் யூனைடேட் அணியின் ஜி.ஹெச்.சிரேட் 6 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அதற்கு பின்பு தற்போது மீண்டும் ஒருமுறை ஒரே ஓவரில் 6 விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண