முதல் இடத்தை பிடித்த முகமது நபி:


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலை இன்று (பிப்ரவரி 14) வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஐந்து வருடங்களாக முதல் இடத்தில் இருந்த வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இச்சூழலில் தான் தற்போது இவரை பின்னுக்குத் தள்ளி 314 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளர் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த 39 வயதான முகமது நபி. மூன்றாவது இடத்தை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா 288 புள்ளிகளுடன் தக்கவைத்துள்ளார்.






அதேபோல், நான்காவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் மற்றொரு வீரரான ரஷித் கான் 255 புள்ளிகளுடன் இருக்கிறார். ஐந்தாவது இடத்தை பப்புவா நியூ கினி வீரர் அசத் வாலா 248 புள்ளிகளுடன் தக்கவைத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் தான் ஷகிப் அல் ஹசன் கடைசியாக விளையாடினார். அதன்பின்னர் நடைபெற்ற எந்த போட்டியிலும் அவர் விளையாடவில்லை. அதேநேரம், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 136 ரன்களை குவித்திருந்தார்.





அதேபோல் பந்துவீச்சிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ரவீந்திர ஜடேஜாவிற்கு 10-வது இடம்:


ஒருநாள் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார். அதாவது இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 10 வது இடத்தை 209 புள்ளிகளுடன் பிடித்திருக்கிறார். டாப் 10 பட்டியலில் இரண்டு வங்கதேச வீரர்களும், இரண்டு ஆப்கானிஸ்தான் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை க்ளென் மேக்ஸ்வெல் 237 புள்ளிகளை பெற்று 6-வது இடத்தில் இருக்கிறார்.


ஏழாவது இடத்தில் ஓமன் வீரர் ஜீஷன் மக்சூத் மற்றும் எட்டாவது இடத்தில் நியூசிலாந்து வீரர் மிட்செல் ஜோசப் சான்ட்னரும் ஒன்பதாவது இடத்தை வங்கதேச வீரர் மெஹிதி ஹசனும் பிடித்திருக்கின்றனர். அதேநேரம் டி20 ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IPL 2024: ஹர்திக் பாண்டியாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர்!


மேலும் படிக்க: Jasprit Bumrah: கிண்டல் செய்த நபர்.. பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கொடுத்த பதிலடி