2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரானது வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதன் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் உச்சம் தொடுகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை போட்டியில் ஏற்கனவே 8 அணிகள் தகுதிபெற்ற நிலையில், இன்னும் இரண்டு அணிகள் எது என்று தெரியவில்லை. அதற்கான தகுதி சுற்று போட்டிகள் நாளை அதாவது ஜூன் 18 முதல் தொடங்க இருக்கின்றன. இந்தநிலையில், தகுதிச் சுற்று தொடர்பான அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம். 


2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்துவதால் அது நேரடியாகவே தகுதிபெற்றது. இந்தியாவை தொடர்ந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். இந்த 10 அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஜூன் 18 முதல் ஜூலை 09 வரை நடைபெறுகிறது. 


10 அணிகளுக்கிடையே 34 போட்டிகள்: 


ஐசிசி 2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் 10 அணிகள் மொத்தம் 34 போட்டிகளில் மோத இருக்கின்றன. இதில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நேபாளம், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் அடங்கும். இந்த அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்-ஏ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை குரூப்-பியில் இடம் பெற்றுள்ளன. 


தகுதிச் சுற்று வடிவம்:


இரு குழுக்களின் அணிகளும் தலா ஒரு போட்டியில் அந்தந்த குழுக்களில் இருக்கும் மற்ற அணிகளுடன் விளையாடும். ஜூன் 27-ம் தேதி வரை குரூப் ஸ்டேஜில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறும். இதன் பிறகு இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-6ல் இடம் பிடிக்கும். சூப்பர்-6 போட்டிகள் ஜூன் 29 முதல் தொடங்கும். சூப்பர்-6 கட்டத்தில், அனைத்து அணிகளும் குழு கட்டத்தில் விளையாடாத அணிகளுடன் விளையாடும். 


இதில் இருக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு போராடும். இறுதிப் போட்டிக்கு வரும் இரு அணிகளும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும். உலகக் கோப்பையில் இரு அணிகளும் 9 மற்றும் 10வது இடத்தைப் பிடிக்கும். 


போட்டி அட்டவணை: 


ஜூன் 18: ஜிம்பாப்வே vs நேபாளம், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்; வெஸ்ட் இண்டீஸ் vs அமெரிக்கா, தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


ஜூன் 19: இலங்கை vs UAE, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; அயர்லாந்து vs ஓமன், புலவாயோ தடகள கிளப்


ஜூன் 20: ஜிம்பாப்வே vs நெதர்லாந்து, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்; நேபாளம் vs அமெரிக்கா, தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


ஜூன் 21: அயர்லாந்து vs ஸ்காட்லாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; ஓமன் Vs UAE, புலவாயோ தடகள கிளப்


ஜூன் 22: வெஸ்ட் இண்டீஸ் vs நேபாளம், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்; நெதர்லாந்து vs அமெரிக்கா, தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


 ஜூன் 23: இலங்கை vs ஓமன், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; ஸ்காட்லாந்து vs UAE, புலவாயோ தடகள கிளப்


ஜூன் 24: ஜிம்பாப்வே vs வெஸ்ட் இண்டீஸ், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்; நெதர்லாந்து v நேபாளம், தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


ஜூன் 25: இலங்கை vs அயர்லாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; ஸ்காட்லாந்து vs ஓமன், புலவாயோ தடகள கிளப்


ஜூன் 26: ஜிம்பாப்வே vs அமெரிக்கா, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்; வெஸ்ட் இண்டீஸ் vs நெதர்லாந்து, தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


ஜூன் 27: இலங்கை vs ஸ்காட்லாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; அயர்லாந்து vs UAE, புலவாயோ தடகள கிளப்


சூப்பர் சிக்ஸ் நிலை மற்றும் பிளேஆஃப்கள்


29 ஜூன்: சூப்பர் 6: A2 v B2, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்


30 ஜூன்: சூப்பர் 6: A3 v B1, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; பிளேஆஃப்: A5 v B4, தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


1 ஜூலை: சூப்பர் 6: A1 v B3, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்


2 ஜூலை: சூப்பர் 6: A2 v B1, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; பிளேஆஃப்: A4 v B5, தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


3 ஜூலை: சூப்பர் 6: A3 v B2, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்


4 ஜூலை: சூப்பர் 6: A2 v B3, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; பிளேஆஃப்: 7வது எதிர் 8வது தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


5 ஜூலை : சூப்பர் சிக்ஸ்: A1 v B2, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்


6 ஜூலை : சூப்பர் சிக்ஸ்: A3 v B3, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்; பிளேஆஃப்: 9வது v 10வது தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்


7 ஜூலை : சூப்பர் சிக்ஸ்: A1 v B1, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்


இறுதிப்போட்டி:


ஜூலை 9: ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்