ஆஸ்திரேலியாவில் 11 வயது சிறுவனின் பந்து வீச்சு, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கவர்ந்துள்ளது.


கிரிக்கெட் என்பது இந்தியாவில் அனைவரையும் கவரக்கூடிய ஒன்று. இதை பார்க்காமலும், விளையாடாமலும் யாரும் இருக்க வாய்ப்பில்லை. சிறுவர்கள் உட்பட அனைவரும் விளையாடக்கூடிய ஒன்று. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்ததாக வர வேண்டும் என்ற நம்பிக்கையில், சிறுவர்கள் உட்பட அனைவரும்  கிரிக்கெட் அகாடமிகளில் சேர்ந்து பயிற்சி செய்து வருகின்றனர். ஒரு சாம்பியன் ஆக வர வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் முயற்சி செய்து வருகின்றனர்.


இந்நிலையில் 11 வயது சிறுவன் சஷில் ஷர்மாவுக்கு அந்த நாளை மறக்க முடியாததாக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மாற்றினார். மைதானத்தில் இளம் குழந்தை பந்துவீசுவதைக் கண்டு, அந்த சிறுவனை  பந்து வீச்சு சொன்னார்.11 வயதான சிறுவன்  இடது கை பந்து வீச்சாளர். தனது இடது கை மூலம் பந்து வீசி  ரோஹித்சர்மாவை கவர்ந்தார். மேலும் இந்த சம்பவம் பற்றி இணையத்தில் பகிரப்பட்ட வீடியோவில் அந்த சிறுவன் கூறியதாவது இந்த வாய்ப்பை கொடுத்த ரோஹித்சர்மாவுக்கு நன்றி. இந்த நாளை என்னால் மறக்க முடியாது என தெரிவித்தார். நான் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என கூறினார்.






இந்தியாவுக்குச் சென்று தேசிய அணிக்காக விளையாட விரும்புகிறீர்களா என்று ரோகித்சர்மா அப்போது அந்த சிறுவனிடம் கேட்டார். ஒருநாள் சிறப்பான கிரிக்கெட் விரராக மாற விரும்புகிறேன். ஆனால் அது எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை என கூறினார்.


நடப்பு ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் வரும் 23ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சூப்பர் 12 சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி ஆட்டங்கள் நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெறுகிறது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நவம்பர் 13-ம் தேதி மெல்பர்னில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.