கருணாநிதி, இளையராஜா, மணி ரத்னம், எஸ்.பி.பி, விஜய், கண்ணதாசன், எம்.எஸ்.வி, ரஃபேல் நடால், மெஸ்ஸி, ஸ்டேன், சனத் ஜெயசூர்யா என ஜூன் மாதத்தில் மட்டும் நிறைய நிறைய ஆளுமைகளின் பிறந்தநாள் வந்து சென்றது. சினிமா, அரசியல், விளையாட்டு என எந்த துறையானாலும் மக்கள் மனசில் இடம் பிடித்த ஒருவருக்கு, அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பொதுவாகத்தான் இருக்கும். 


இந்நிலையில், ஜூன் மாதம் முடிந்து இன்றுதான் ஜூலை பிறந்திருக்கிறது. ஜூலை 1-ம் தேதிதான் ஆயிற்று. ஆனால், 7 DAYS TO GO என ஒருவரின் பிறந்தநாளுக்காக தெறி வீடியோ எடிட்களும், ரைட்-அப்களும் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்துள்ளன. ஃபோட்டோக்களும், பதிவுகளும் நோஸ்டால்ஜியாவை கிளப்புகின்றன. 


யெஸ், அவரேதான், அவருக்காகத்தான் இந்த கவுண்ட்-டவுன் ஆரம்பம்! #MSD40



சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கிரிக்கெட்டிங் சீன்லையே இல்லையென்றாலும், தோனி குறித்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவானாலும் சரி, மகள் ஸீவா உடனான க்யூட் வீடியோவாக இருந்தாலும் சரி, அவர் பேசவவே இல்லையென்றாலும் அவரை பற்றிய செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் என்றைக்குமே டிரெண்ட் ரகம்!






'Common DP', ’Common Cover Pic', 'Common Whatsapp Status' என இன்று முதல் தோனி பர்த்டே செலிபிரேஷன்ஸ் ஆரம்பமாக, சமூக வலைதள பக்கங்கள் களைக்கட்டுகின்றது. நம்மை கொண்டாட வைத்த, ஆர்ப்பரிக்க வைத்த, ஓய்வு அறிவித்தபோது அழுக வைத்த கிரிக்கெட்டின் ஆதர்ச நாயகனுக்கு அவர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போது இருந்த கொண்டாட்டத்தைவிட, இப்போதுதான் அவரை கொண்டாட பல காரணங்களும், ஆசைகளும் ஒரு சேர நினைவுகளில் வந்து செல்கின்றன.






ஏதாவது ஒரு விடுமுறை நாட்களிலேயே, ‘போர்’ அடிக்கும்போது பழைய கிரிக்கெட் போட்டிகளை கண்டு வெறி ஏற்றிக்கொள்வது வழக்கம். இது தோனி, பர்த்டே மாதம் வேறு! சொல்லவா வேண்டும். 






தோனியின் மாஸ் இன்னிங்ஸ்களை ரிப்பீட் மோடில் ஓடவிட்டு வெயிட்டிங்கை வெறியேற்ற ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐசிசி உலகக்கோப்பை ஃபைனலா, 2018 ஐபிஎல் கம்-பேக்கா, ஹெலிகாப்டர் ஷாட்டா, இன்னும் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும். 


ஆனால், கிரிக்கெட்டால் மட்டுமா தோனி கொண்டாடப்படுகிறார்? நிச்சயமாக இருக்க முடியாது. கிரிக்கெட்டையும் தாண்டி, தோனியை கொண்டாட பல காரணங்கள் இருக்கின்றன. ஜூலை 7-ஐ கொண்டாட ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம், ஆனால், எல்லோரையும் இணைக்கும் அந்த ஒரு காரணம், மகேந்திர சிங் தோனி! அட்வான்ஸ் ஹாப்பி பர்த்டே தோனி!