காமன்வெல்த் நீச்சல் போட்டிகளில் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அத்வைத் பேஜ் மற்றும் குஷ்காரா ராவத் ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இதில் அத்வைத் பேஜ் 1500 மீட்டர் பந்தய தூரத்தை 15:39:25 என்ற நேரத்தில் கடந்து தன்னுடைய ஹீட்ஸில் 4வது இடத்தை பிடித்தார். அதேபோல் மற்றொரு இந்திய வீரரான குஷ்காரா ராவத் 1500 மீட்டர் பந்தய தூரத்தை 15:47:77 என்ற நேரத்தில் கடந்தார். அவரும் தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 4வது இடத்தை பிடித்தார். 


மொத்தமாக அனைத்து ஹீட்ஸ்களின் முடிவில் அத்வைத் பேஜ் 7வது இடத்தையும், குஷ்காரா ராவத் 8வது இடத்தையும் பிடித்தனர். இதன்மூலம் முதல் 8 இடங்களுக்கு வந்ததால் இவர்கள் இருவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இறுதிப் போட்டி நாளை இரவு நடைபெற உள்ளது. 


 






முன்னதாக இன்று ஆடவருக்கான 200 மீட்டர் பேக்ஸ்டோர்க் பிரிவு போட்டி நடைபெற்றது. அதில் இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் பங்கேற்றார். இவர் பந்தய தூரத்தை 2.00.84 என்ற நேரத்தில் கடந்தார். அத்துடன் தன்னுடைய ஹீட்ஸ் பிரிவில் 3வது இடத்தையும் பிடித்தார். எனினும் அனைத்து ஹீட்ஸ்களின் முடிவில் இவர் மொத்தமாக 9வது இடத்தை பிடித்தார். முதல் 8 இடங்களை பிடிக்கும் நபர்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள். ஆகவே 9வது இடத்தை பிடித்ததால் ஸ்ரீஹரி நட்ராஜ் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை நுழிலையில் தவறவிட்டார். எனினும் 200 மீட்டர் பேக்ஸ்டோர்க் பிரிவில் 2.00.84 என்ற நேரத்தில் கடந்து ஸ்ரீஹரி நட்ராஜ் புதிய தேசிய சாதனைப் படைத்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண