விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு  ஒரு முறை இன்று நடைபெற்ற தர்மர் பட்டாபிஷேக விழாவில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட தர்மருக்கு யானை படை, குதிரை படை சூழ கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்.


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில், பழமைவாய்ந்த ஸ்ரீதர்ம ராஜா ஸ்ரீதிரெளபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பாரம்பரியம் மிக்க தர்மராஜா பட்டாபிஷேக வீதியுலா இன்று  நடைபெற்றது.


மேலும் படிக்க: Air India: எல்லாமே சொதப்பல்.. ஏர் இந்தியா மீது 3 மாதத்தில் 1,000 புகார்கள்.! பதிலளித்த மத்திய அரசு.!




தர்மர் பட்டாபிஷேக விழாவினை முன்னிட்டு நேற்றைய தினம் அக்னி பூஜை, கலச ஸ்தாபனம் கும்ப பூஜை, காப்பு கட்டுதல் நடைபெற்றது. இன்று தர்மராஜா பட்டாபிஷேக பூஜை காலை 7 மணிக்கு பட்டாபிஷேக மங்கள ஆரத்தியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க 60 ஆண்டுகளுக்கு பிறகு தர்மர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தேரில்  பட்டாபிஷேகம் செய்யப்பட்டது.


தர்மர் பட்டாபிஷேகத்தையொட்டி கிராமம் முழுவதும்  வீதியுலா நடைபெற்றதால் முக்கிய வீதிகள்தோறும் பச்சைக்கீற்று (தென்னை ஓலை) பந்தல் அமைக்கப்பட்டு  அலங்கரிக் கப்பட்ட யானைகள், குதிரைகள் படைகள் என அணிவகுக்க  கரகாட்டம், மயிலாட்டம், கழியாட்டம்,பொய்க்கால் குதிரை, செண்டை மேளம், உறுமி மேளம் முழங்க திரெளபதி அம்மன, அர்ஜீனன், நகுலன், சகாதேவன் , பீமர் உள்ளிட்டவர்கள் முன்னே செல்ல பட்டாபிஷேகம் செய்துக்கொண்ட


தர்மர் ரதம் வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்டது. ரதத்தின் மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள் பழங்கள், மலர்கள் மாலைகள், வேட்டி துண்டு மற்றும் கலசம் ஆகியவைகள் கொண்டு தர்மரை தரிசனம் செய்தனர். தர்மம் வீதியுலா வரும்போது செழுமையாக காட்சியளிக்க வேண்டும் என்பதால் தென்னங்கீற்றால் ஆன் பந்தல் கிராமம் முழுவதும் உள்ள வீதிகளில் அமைக்கபட்டிருந்தன.


கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண