காமன்வெல்த் போட்டிகளில் இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் இன்று ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), மோஹித்(125 கிலோ) ஆகியோர் களமிறங்க உள்ளனர். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக்(), திவ்யா காக்கரன்(68 கிலோ), அன்ஷூ மாலிக் (57கிலோ) ஆகியோர் களமிறங்கனர்.
இந்நிலையில் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் பங்கேற்றார். இவர் காலிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஐரின் சிமொண்ட்ஸை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 10-0 என்ற கணாக்கில் வென்றார். அத்துடன் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் சைபிரஸ் நாட்டின் அலெக்ஸியோஸை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மோஹித் 11-1 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் அவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
அதன்பின்னர் மகளிருக்கான 68 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்கரன் பங்கேற்றார். இவர் காலிறுதிச் சுற்றில் நைஜீரியா வீராங்கனை ஓப்ரூடுவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா காக்கரன் 0-10 என்ற கணக்கில் நைஜீரிய வீராங்கையிடம் தோல்வி அடைந்தார்.
முன்னதாக ஆடவருக்கான 65 கிலோ எடைப்பிரிவில் நடப்புச் சாம்பியனான பஜ்ரங் புனியா பங்கேற்றார். இவர் இரண்டாவது சுற்றில் நவ்ரோஸ் நாட்டைச் சேர்ந்த பிங்ஹமை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்திய வீரர் பஜரங் புனியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் முதல் சுற்றில் 4 புள்ளிகள் எடுத்திருந்த போது பிங்ஹமை பின் செய்து போட்டியில் வெற்றி பெற்றார். அத்துடன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
அதேபோல் ஆடவர் 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் பூனியா பங்கேற்றார். இவர் இரண்டாவது சுற்றில் நியூசிலாந்தின் மேத்யூ ஆக்சன்ஹாமை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் புனியா 10-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்