காமன்வெல்த் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணியும், கானா மகளிர் ஹாக்கி அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் கோல்கீப்பர் சவிதா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் இந்திய அணியின் குர்ஜித் கவுர் அசத்தலான கோல் அடித்து வெற்றி பெற வைத்தார்.
இந்திய அணியின் தொடக்கம் முதலே ஆதிக்கத்தை செலுத்தி ஆடி வந்ததால் கானா அணியினர் தடுமாறினர். அவர்களின் தடுமாற்றத்தை பயன்படுத்திக் கொண்ட இந்திய மகளிர் அணியினர் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.
முதல் பாதியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதனால், அடுத்த பாதியில் கானா கட்டாயம் கோல் அடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினர். ஆனாலும், அவர்களின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய வீராங்கனைகள் அசத்தலாக தடுத்து நிறுத்தினர். பந்தை அருமையாக பாஸ் செய்து ஆடிய இந்திய வீராங்கனைகள் சங்கீதாவிடம் பந்தை பாஸ் செய்தனர். அவர் அற்புதமாக 3வது கோலை அடித்து அசத்தினார்.
இதையடுத்து, போட்டியின் நிறைவில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிட்டியது. இந்த பெனால்டி ஸ்ட்ரோக்கில் குர்ஜித் கவுர் களமிறங்கினார். அவர் கோல்கீப்பரை ஏமாற்றி சாதுர்யமாக கோல் அடித்தார். இதவால், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தியாவின் வெற்றி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்ட நிலையில், கானா அணியினர் பதில் கோல் திருப்ப ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், அவர்களது முயற்சிகளுக்கு இந்திய வீராங்கனைகள் முட்டுக்கட்டையாக இருந்தனர். போட்டி நிறைவடைய சில நிமிடங்களே இருந்த நிலையில் இந்திய இன்னொரு கோல் அடித்தது.
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்றில் மோதக்கூடிய அணிகள் என்னென்ன தெரியுமா?
மேலும் படிக்க : Commonwealth Games 2022 Day 1 LIVE: பேக்ஸ்ட்ரோக் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்