இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகி உள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றுள்ளனர். 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.


காமன்வெல்த் விளையாட்டு தொடரில் இன்று முதல் முறையாக 


இன்று பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மகளிர் அணி இந்திய மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு நடந்த பெண்களுக்கான ஒரு நாள் உலகப்கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி மீண்டும் ஒரு கோப்பையை வெல்லும் முனையில் களமிறங்கும். அதேபோல், இந்திய அணியும் முழு வலிமையுடன் களமிறங்கியது. இலங்கை எதிரான ODI மற்றும் T20I ஆகிய இரண்டு தொடரையும் வெற்றி உற்சாகத்துடன் ஹர்மன்பீரித் கவுர் தலைமையில் களம் காண்கிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


ஆஸ்திரேலியா மகளிர் vs அணி இந்திய மகளிர் அணி போட்டி விவரங்கள் :


இடம்: எட்ஜ்பாஸ்டன், பர்மிங்காம்


தேதி மற்றும் நேரம்: ஜூலை 29, மாலை 3:30


டெலிகாஸ்ட் & லைவ் ஸ்ட்ரீமிங்: SONY TEN Network, Sony LIV app


ஆஸ்திரேலியா மகளிர் vs அணி இந்திய மகளிர் அணி பிட்ச் அறிக்கை : 


எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் பாரம்பரியமாக பேட்டிங்கிற்கு சிறந்த பிட்ச். மேலும் முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் T20I போட்டிகளில் இதுவரை அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் டாஸ் வென்ற கேப்டன் கவுர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். 


ஆஸ்திரேலியா பெண்கள்:


அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), எலிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஆஷ்லே கார்ட்னர், நிக்கோலா கேரி, ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், மேகன் ஷட்


இந்திய பெண்கள்:


ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, சினே ராணா, ஹர்லீன் தியோல், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ்


பெஸ்ட் பெஃர்பார்மன்ஸ் : 


பெத் மூனி:


பெத் மூனி ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையின் முக்கியமான பேட்ஸ்மேன்களில் ஒருவர், மேலும் அவர் அலிசா ஹீலியுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூனியின் சராசரி 37.26 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 122.16. மூனி T20I போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் 11 அரை சதங்களை அடித்துள்ளார். 


ஜெஸ் ஜோனாசென்:


ஜெஸ் ஜோனாசென் எப்போதுமே ஆஸ்திரேலியா அணிக்கான பந்துவீச்சு அமைப்பில் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் இந்திய பேட்டிங் ஆர்டருக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 29 வயதான ஜோனாசென் இதுவரை 89 டி20 போட்டிகளில் 5.47 மற்றும் 19.45 சராசரியுடன் 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.