2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் ரசிகர்கள் கண்கள் அனைத்தும் பாகிஸ்தான் சுலேமான் பலோச்க்கு எதிராக ஷிவா தாபா களமிறங்கினார்.


ஆடவருக்கான 63.5 கிலோ எடைப்பிரிவின் 32வது சுற்று போட்டியில் பாகிஸ்தானின் சுலேமான் பலூச்சை தாபா எதிர்கொண்டார். போட்டியின் ஆரம்பத்தில் இருந்து இந்திய வீரர் ஷிவா தாபா ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். பாகிஸ்தான் வீரர் மீது தொடர்ந்து தாக்கல் நடத்த ஒவ்வொரு அடியும் கச்சிதமாக ஷிவா தாபா அடித்ததன் மூலம் போட்டியில் பாய்ண்ட் அடிப்படையில் முன்னேற்றம் கண்டார். 


இந்த நிலையில்,லைட் வெல்டர் வெயிட்டின் 63.5 கிலோ எடைப்பிரிவில் பாகிஸ்தான் வீரர் சுலேமான் பலோச்சை 5-0 என்ற கணக்கில் 28 வயதான இந்திய வீரர் ஷிவா தாபா வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  






தாபா முன்னாள் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்றவர். மேலும், ஐந்து முறை ஆசியப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, தாபா 16வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் மற்றும் 2021 உலக வெண்கலப் பதக்கம் வென்ற ரீஸ் லிஞ்சை எதிர்கொள்ள இருக்கிறார். இதில் தாபா வெற்றி பெற்றால் அடுத்த சுற்றான காலிறுதி போட்டிக்கு தகுதி பெறுவார். 


இந்திய குத்துச்சண்டை அணியில் நான்கு பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் என மொத்தம் 12 குத்துச்சண்டை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.


தாபாவைத் தவிர, டோக்கியோ 2020 வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன், 2019 உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்ற அமித் பங்கல் ஆகியோர் நடந்து வரும் பர்மிங்காம் விளையாட்டு 20ல் இந்தியாவுக்குப் பதக்கம் வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.