காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் மணிகா பாட்ரா-சத்யன் ஜோடி நேற்று முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்தது. அதேபோல் மற்றொரு இந்திய இணையான சரத் கமல்-ஸ்ரீஜா ஜோடியும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்தது. 


இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் சத்யன் -மணிகா பாட்ரா ஜோடி நைஜீரியாவின் ஓல்ஜாடே-அஜோக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் உலக தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள சத்யன் -மணிகா பாட்ரா ஜோடி 3-0 என்ற கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இன்று நள்ளிரவு நடைபெறும் காலிறுதிச் சுற்றில் சத்யன் -மணிகா ஜோடி பங்கேற்க உள்ளது. 


 






அதேபோல் இந்தியாவின் மற்றொரு ஜோடியான சரத் கமல்-ஸ்ரீஜா அகுலா இணை மலேசியாவின் ஃபெங்க்-ஹோ இணையை எதிர்த்து விளையாடியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரத் கமல்-ஸ்ரீஜா ஜோடி 3-0 என்ற கணக்கில் போட்டியை வென்று அசத்தியது. இந்த இணையும் இன்று நள்ளிரவு நடைபெற உள்ள காலிறுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க உள்ளது. 


மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பாட்ரா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் -சரத் கமல் ஜோடியும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தேசிய சாம்பியன் ஸ்ரீஜா அகுலாவும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில் மணிகா பாட்ரா-திவ்யா சிட்லே ஜோடியும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆகவே டேபிள் டென்னிஸ் போட்டிகள் இந்திய பதக்க வேட்டையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண