காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். மற்றொரு இந்திய வீரர் சத்யன் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தார். இதன்காரணமாக அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடினார்.


 


இந்தப் போட்டியில் சத்யன் இங்கிலாந்து வீரர் ட்ரின்ஹாலை எதிர்த்து விளையாடினார். இதில் முதல் கேமை சத்யன் 11-3 என வென்றார். அடுத்த கேமை சத்யன் 11-5 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் மூன்றாவது கேமை 11-9 என்ற கணக்கில் வென்றார். இதன்காரணமாக சத்யன் வேகமாக 3-0 என முன்னிலை எடுத்தார். எனினும் 4வது கேமை இங்கிலாந்து வீரர் ட்ரின்ஹால் 11-8 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் 5வது கேமையும் ட்ரின்ஹால் 11-8 என்ற கணக்கில் வென்றார்.


 






6வது கேமிலும் ட்ரின்ஹால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வேகமாக புள்ளிகளை குவித்து வந்தார். ஒரு கட்டத்தில் 9-5 என முன்னிலை பெற்று இருந்தார். அதன்பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய இந்திய வீரர் சத்யன் 9-9 என சமன் செய்தார். எனினும் அந்த கேமை 12-10 என்ற கணக்கில் ட்ரின்ஹால் வென்றார். இரு வீரர்களும் தலா 3 கேம்களை வென்று இருந்தனர். 


போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க 7வது மற்றும் கடைசி கேம் நடந்தது. சத்யன் வேகமாக 7 புள்ளிகளை எடுத்தார். அதன்பின்னர் ட்ரின்ஹால் மீண்டும் சில புள்ளிகளை குவித்தார். சத்யன் மற்றும் ட்ரின்ஹால் ஆகிய இருவரும் தலா 8 புள்ளிகள் பெற்று இருந்தார். இறுதியில் சத்யன் 11-9 என்ற கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். 


நடப்பு காமன்வெல்த் தொடரில் இந்திய அணி முதலில் குழு பிரிவில் தங்கம் வென்றது. அதன்பின்னர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்-ஸ்ரீஜா தங்கம் வென்று அசத்தினர். இதைத் தொடர்ந்து ஆடவர் இரட்டையர் பிரிவில் சத்யன் -சரத் கமல் ஜோடி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண