காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மகளிருக்கான கிளாஸ் 3-5 பிரிவில் இந்தியாவின் பவினா பட்டேல் பங்கேற்றுள்ளார். இவர் இந்தப் பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் சு பெய்லியை எதிர்த்து விளையாடினார். 


இந்தப் போட்டியில் தொடக்க முதலே பவினா பட்டேல் ஆதிக்கம் செலுத்தினார். முதல் கேமை 11-6 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமையும் 11-6 என்ற கணக்கில் வென்றார். மூன்றாவது கேமையும் 11-6 என்ற கணக்கில் எளிதாக வென்றார். இதன்மூலம் 11-6,11-6,11-6 என்ற கணக்கில் போட்டியை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் பாரா டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 


 






பவினா பட்டேல் இறுதிப் போட்டியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானா இக்போயியை எதிர்த்து விளையாட உள்ளார். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இவர் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை வென்றுவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 






அதேபோல் பாரா டேபிள் டென்னிஸ் ஆடவருக்கான ஒற்றையர் கிளாஸ் 3-5 பிரிவில் இந்தியாவின் ராஜ் அரவிந்தன் அழகர் வெண்கலப் பதக்க போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்தப் போட்டியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இசாவு ஓகுன்குன்லேவை எதிர்த்து விளையாட உள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண