உலகில் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக பார்க்கப்படுவது காமன்வெல்த் போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த காமன்வெல்த் நடப்பாண்டில் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற உள்ளது. பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கும் காமன்வெல்த் போட்டித்தொடரில் 72 நாடுகள் பங்கேற்கின்றனர்.
மொத்தம் 215 வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டி இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 8-ந் தேதி வரை பங்கேற்க உள்ளது. இந்த போட்டியின் தொடக்க விழா இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்க உள்ளது. இங்கிலாந்து நாட்டு நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.
காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவின் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். தொடக்க விழா நிகழ்ச்சிகளும், கலைநிகழ்ச்சிகள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. சோனி லைவ் வெப்சைட் மற்றும் ஆப்களிலும் தொடக்க விழாவை நேரலையில் கண்டு களிக்கலாம்.
மேலும் படிக்க : World Wrestling Championships: 32 ஆண்டுகளுக்கு பிறகு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு தங்கம் வென்ற சூரஜ்
காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி உள்பட வட்டார மொழிகளிலும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டிகளை தமிழில் சோனி டென்4, சோனி டென் 4 எச்.டி. தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்கின்றன.
இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கொடி அணிவகுப்பில் இந்தியாவின் தேசிய கொடியை ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ்சோப்ரா ஏந்திச்செல்வார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டதால் அவர் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின் சார்பில் காமன்வெல்த் போட்டியில் தேசிய கொடியை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஏந்திச்செல்ல உள்ளார்.
மேலும் படிக்க : Chess Olympiad 2022 : வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்...! தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி..!
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செக்மேட் 8: செஸ் ஒலிம்பியாடும்.. ஒலிம்பிக்ஸூம்.. என்னென்ன ஒற்றுமை வேற்றுமை?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்