இத்தாலி தலைநகர் ரோமில் யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிரேகோ ரோமன் பிரிவில் இந்தியா சார்பில் சூரஜ் வசிஸ்ட் 55 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். இறுதிப் போட்டியில் சூரஜ் ஐரோப்பிய சாம்பியனான ஃபாரியம் முஸ்தஃபாயேவை எதிர்த்து விளையாடினார். 


அந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரஜ் 11-0 என்ற கணக்கில் முஸ்தஃபாயேவை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் சாம்பியன் பட்டம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேகோ ரோமன் பிரிவில் 32 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமையை சூரஜ் படைத்துள்ளார். 


 






இதற்கு முன்பாக 1990ஆம் ஆண்டு நடைபெற்ற யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேகோ ரோமன் பிரிவில்  பப்பு யாதவ் தங்கப்பதக்கம் வென்று இருந்தார். அதன்பின்னர் தற்போது சூரஜ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.


மேலும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 1980ஆம் ஆண்டு வினோத் குமார் யு-17 உலக சாம்பியன்ஷிப் பிரிவில் தங்கம் வென்றார். அதன்பின்னர் 1992ஆம் ஆண்டு யு-20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் பப்பு யாதவ் தங்கம் வென்று இருந்தார். இதன்மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு இது நான்காவது தங்கமாக அமைந்துள்ளது. நடப்பு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேகோ ரோமன் பிரிவில் 48 கிலோ எடைப்பிரிவில் ரோனித் சர்மா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகவே இந்தியாவிற்கு மேலும் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண