காமன்வெல்த் போட்டித் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய வீரர்கள் தனிநபர் ஆட்டங்களிலும், குழு ஆட்டங்களிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியின் கடைசிநாளான இன்று இந்தியா தங்கத்தை குவித்து வருகிறது.
இதன்காரணமாக, பதக்கப்பட்டியலில் 5வது இடத்தில் இருந்த இந்தியா நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியா தற்போதைய நிலவரப்படி 20 தங்கங்கள், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
முதலிடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலியா 66 தங்கம், 57 வெள்ளி மற்றும் 54 வெண்கலம் என மொத்தம் 177 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து 56 தங்கம், 61 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் என மொத்தம் 170 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் கனடா 26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்களுடன் உள்ளது. 5வது இடத்தில் நியூசிலாந்து 19 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் உள்ளது.
நடப்பு காமன்வெல்த் தொடரின் கடைசிநாளான இன்று இந்தியாவின் பி.வி.சிந்து பேட்மிண்டன் போட்டியில் தங்கத்தையும், லக்ஷயா சென் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினர். மேலும், இன்று நடைபெறும் ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியாவிற்கு இன்னொரு பதக்கம் உறுதியாக உள்ளது.
கடந்த முறை நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது. 2018ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66 பதக்கங்களை வென்று மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. இந்த முறை கனடா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் படிக்க : IND vs AUS CWC Final: ஹாக்கியில் வரலாறு படைக்குமா இந்தியா..? ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கம் வெல்லுமா..?
மேலும் படிக்க :PV Sindhu Win Gold : காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்றார் தங்கமகள் பி.வி.சிந்து..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்