ஆடவருக்கான லான் பவுல்ஸ் 4எஸ் குழு போட்டியில் இந்திய அணி  இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் சுனில் பகதூர், நவ்னீத் குமார், சந்தன் குமார் மற்றும் தினேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி நார்தன் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் நார்தன் அயர்லாந்து அணி 18-5 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.


இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இதன்மூலம் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய ஆடவர் அணி முதல் முறையாக பதக்கம் வென்று அசத்தியுள்ளது. முன்னதாக லான் பவுல்ஸ் மகளிர் 4 எஸ் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று இருந்தது. இதுவரை காமன்வெல்த் வரலாற்றில் லான் பவுல்ஸ் இந்திய பதக்கமே வென்றதில்லை. இந்தச் சூழலில் இம்முறை 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.


 






முன்னதாக காமன்வெல்த் போட்டிகளில் லான் பவுல்ஸ் போட்டியில் மகளிர் 4s பிரிவில் இந்தியாவின் லவ்லி, பின்கி,நயன்மோனி மற்றும் ரூபா திர்கே ஆகியோர் குழுவாக பங்கேற்றனர். இந்திய அணி 17-10 என்ற கணக்கில் போட்டியை வென்றது. அத்துடன் தங்கப்பதக்கத்தையும் இந்திய அணி வென்று அசத்தியது. முதல் முறையாக லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய தங்கப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இன்று ஏற்கெனவே இந்தியாவிற்கு தடகளத்தில் இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைத்தன. முதலில் 1000 மீட்டர் நடை பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்று அசத்தியிருந்தார். அவரைத் தொடர்ந்து ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் இந்தியாவின் அவினாஷ் சேபிள் புதிய தேசிய சாதனை படைத்தார். அத்துடன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று அசத்தினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண