அதிமுகவில் உட்கட்சி விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே பல்வேறு கட்ட மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனியில் நடைபெற்ற அமமுக கட்சியின் செயல்வீரர் கூட்டத்திற்கு வருகை தந்த டிடிவி.தினகரனிடம் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் இணைவார்களா? என்றும் இபிஎஸ், ஓபிஎஸ் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் ஓபிஎஸ்க்கு ஆதரவு அளிப்பீர்களா? என்று கேட்டபோது பதிலளிக்காமல் டிடிவி சென்ற நிலையில் , தேனிக்குள் வந்த டிடிவியை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றது குறிப்பிட்டு பார்க்கப்பட்டது.


மேலும் படிக்க: தேனி மாவட்டம் முழுவதும் நாளை 671 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்




இந்த நிலையில் அதே நாளில் ஓபிஎஸ் சென்னையிலிருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில் சசிகலா அணியினருடன் இணைந்து செயல்பட தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார், என்ற ஒரு செய்தி சமூக வளைதலங்களில் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது ,


மேலும் படிக்க: உலகப் புகழ்பெற்ற குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நடந்த நீலாதேவி திருக்கல்யாணம்




மேலும் படிக்க: அன்புச்செழியன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் வீடுகளில் ஐ.டி. ரெய்டு..! கணக்கில் வராத ரூ.200 கோடி..!


நேற்று அஇஅதிமுக கழக முன்னாள் அவைத் தலைவர் மதுசூதனன் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு நிர்வாகிகளிடம் பேசியபோது சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் டிடிவி தினகரன் கட்சியினருடன் அதிமுகவினர் இணைந்து  செயலாற்ற வேண்டுமென ஓபிஎஸ் உத்தரவிட்டதாக கூறி  சமூக வளைதலங்களில் தகவல்கள் பரவியதை தொடர்ந்து இதுபோன்று ஓபிஎஸ் எந்த ஒரு உத்தரவும் இடவில்லை என்றும் இது போன்ற தவறான செய்தி பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவு என்ற வார்த்தையை ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பயன்படுத்தவில்லை என மாவட்ட செயலாளர் பத்திரிக்கையாளருக்கு பேட்டி அளித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண