நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அடிக்கடி திருப்போரூர் கந்தசாமி கோவில் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது காருக்கு திருப்போரூர் கந்தசாமி கோவிலில் பூஜை செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சீமான் புதிய நவீன கார் ஒன்றை வாங்கியுள்ளார். கருப்பு நிறத்தில் வாங்கப்பட்டுள்ள டொயோட்டோ நிறுவனத்தின் பார்ச்சூனர் ரக காருக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக திருப்போரூர் வந்த அவரை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்லாளன் யூசுப், நகர செயலாளர் சின்னராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் கோயிலின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். 




விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன் அவர்கள் திருப்போரூர் கந்தசாமி கோவிலில்தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதால் தான் இந்த கோவிலுக்கு அடிக்கடி சீமான் வருவதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த கார் புகைப்படங்கள் மற்றும் சீமான் காருக்கு பூஜை செய்த புகைப்படங்கள் விமர்சனத்தை பெற்றுள்ளன.




இதைத் தொடர்ந்து அவரது காரின் சாவி கந்தசுவாமி கோயில் மூலவரின் பாதத்தில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்து வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் வெளியே வந்து காருக்கு பூஜை செய்து அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தனது குழந்தைக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மொட்டை அடித்து எடைக்கு எடை அரிசி, வெல்லம் வழங்கியிருந்தார்.


தற்போது இணையதளத்தில் சீமான் வழங்கிய கார் புகைப்படங்கள் மிக வேகமாக பரவி வருகிறது. சமூகவலைதளத்தில் சீமான் வாங்கிய காரின் விலை குறித்து விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன. இந்த காரின் விலை பட்டியலும் வெளியாகி இணையதளம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைதளத்தில் ஒரு புறத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்து வரும் நிலையில் அதற்கு பதிலடியாக நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் சமூக ஊடக நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் பதில் அளித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண