காமன்வெல்த்தில் களமிறங்கியுள்ள இந்திய டேபிள் டென்னிஸ் அணி மிகவம் வலுவாக உள்ளது. டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்ற முதல் நாளான இன்று இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் எதிரணியினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர் என்றே கூறலாம்.
தென்னாப்பிரிக்கா அணியை மூன்று போட்டிகளிலும் நேர் செட் கணக்கில் வென்ற இந்திய மகளிர் அணி குரூப் 2 போட்டியில் பிஜி அணியை எதிர்கொண்டது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது போலவே பிஜி அணிக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தினர்.
பிஜி அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியான இரட்டையர் பிரிவில் சிதாலேவும், அகுலாவும் பிஜியின் டைட்டானா, யி இருவருடன் மோதினர். அவர்கள் இருவருக்கும் எதிராக தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிதாலேவும், அகுலாவும் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். அடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான மணிகா பத்ராவும், பிஜியின் லியும் மோதினர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது போலவே பிஜி அணிக்கு எதிராகவும் மணிகா பத்ரா ஆதிக்கம் செலுத்தினார்.
அடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியில் அகுலாவும், யி யும் மோதினர். அகுலாவும் தென்னாப்பிரக்கா அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது போலவே, பிஜி அணிக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 3-0 என்ற கணக்கில் அகுலா வெற்றி பெற்றார். இந்தியாவிற்காக களமிறங்கிய சிதாலே, அகுலா ஜோடி, மணிகா பத்ரா, அகுலா நேர் செட் கணக்கில் 3-0 என்று வீழ்த்தியது.
இதனால், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பிஜியையும் வீழ்த்தியது. வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு அடுத்தடுத்த சுற்றுகளில் வெற்றி பெற ரசிகர்களும், வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்