நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி குழு விளையாட்டுக்களிலும், தனிநபர் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர். மகளிர் ஹாக்கியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணியினர் தங்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டாலும், வெண்கலம் வெல்லும் போட்டிக்கான ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் இரண்டாவது காலிறுதியில் இந்தியாவின் சலீமா டேடே ஒரு கோல் அடித்தது. இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், கடைசி காலிறுதியில் இங்கிலாந்தின் கேப்டன் ஒலிவியா மேரி 1 கோல் அடித்ததால் போட்டி 1-1 என்று சமனில் முடிந்தது. இந்த போட்டி பதக்கத்திற்கான போட்டி என்பதால் பெனால்டி ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது.
இதில், இந்திய கோல்கீப்பரும், கேப்டனுமாகிய சவீபதா அபாரமாக ஆடி சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி கோல் அடிக்கும் முயற்சியை தடுத்தார். அதேசமயம் இந்திய வீராங்கனைகள் பெனால்டி ஷூட் அவுட்டில் 2 கோல்களை விளாசினர். இதனால், இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியது.
காமன்வெல்த் வரலாற்றில் இந்திய அணி கடைசியாக ஹாக்கியில் 2006ம் ஆண்டு ஹாக்கியில் பதக்கம் வென்றது. அதற்கு பிறகு 16 ஆண்டுகளுக்கு பிறகு காமன்வெல்த்தில் இந்தியா பதக்கம் வென்று அசத்தியுள்ளது. பதக்கம் வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு நாட்டின் தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க : PV Sindhu Reaches Final: காமன்வெல்த் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து.. தங்கத்துக்கு குறிவைக்கிறாரா இந்திய சிங்கம்?
மேலும் படிக்க : Amit Panghal : பதக்கங்களில் தங்க மழை பொழியும் இந்தியா.. குத்துச்சண்டையில் தங்கம் வென்று அசத்திய அமித் பங்கால்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்