NPS Scheme Details: இளமையில் உழைத்து முதுமை காலத்தில் ஓய்வு பெறும்போது எவ்வித அச்சமும் இல்லாமல் நம் வாழ்க்கையை நடத்த போதுமான அளவு செல்வம் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கும்.
உழைக்கும் காலத்தில் எப்படியாவது உழைத்துவிட முடியும். ஆனால், முதுமையில் நாம் நினைத்தெல்லாம் செய்ய முடியாது அல்லாவா? அதற்குதான் உழைக்கும் காலத்திலேயே கொஞ்சம் நம் பிற்கால வாழ்க்கைக்கு சேமித்து வைத்துவிட வேண்டும். நம் ஓய்வு காலத்திலும், மாதா மாதாம் ஒரு குறிப்பிட்ட தொகை நம் கைக்கு கிடைத்தால் நிம்மதியான ரிட்டையர்மெண்ட் காலம்தான்.
ஓய்வூதியமாக ரூ.50000 மாதம் கிடைத்தான் எப்படி இருக்கும்? அதற்கு சிறந்த சாய்ஸ் தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme).
ஓய்வூதியம் பெறுவது எப்படி?
30 வயதில் தொடங்கி மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் போதும். இது ஒரு கோடியாக மாறிவிடும். நீங்கள் 65 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள் என்றால். மாதம் உங்களுக்கு ரூ.50000 ஓய்வூதியமாக கிடைக்கும்.
முதலீட்டு தொகை எவ்வளவு?
இது அரசு அங்கீகாரம் பெறபட்ட திட்டம். இத்திட்டதில் ஆண்டிற்கு ரிட்டன்ஸ்டாக 9 முதல் 12 சதவீதம் கிடைக்கும். 40 சதவீதம் இந்தத் திட்டத்தில் 40 சதவிகித வருடாந்திர விருப்பம் உள்ளது. ஆண்டு விகிதமான 6 சதவீதத்தில், மொத்தமாக ரூ.1.7 கோடி கிடைக்கும். மீதமுள்ள ரூ.1.04 கோடி ஆண்டு தொகைக்கு செல்லும். இப்போது இந்த ஆண்டுத் தொகையிலிருந்து, ஒவ்வொரு மாதமும் 59,277 ரூபாய் ஓய்வூதியமாகப் பெறுவீர்கள். ஆண்டுத் தொகை எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஓய்வூதியமும் இருக்கும்.
NPS கணக்கைத் தொடங்க, https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூடுதல் தகவல்களை பெறலாம்.
இதில் தனியார் துறை ஊழியர்களும் இத்திட்டத்தில் இணைய முடியும். பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்தால் இது நிர்வகிக்கப்படுகிறது.
திட்ட விவரம்:
திட்டத்தில் இணைய வயது: 30 வயது நிரம்பியவர்கள்
முதிர்வு தினம்: 65 வயது
மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை: ரூ.10,000/ மாதம்
ஆண்டு முதலீடு திட்டம் : 40 சதவீத தொகை
இந்த திட்டத்தில் 18 வயது முதல் 65 வயது வரை பண முதலீடு செய்யலாம்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் வட்டித் தொகை, மெச்சூரிட்டி தொகை, மொத்த பென்சன் தொகை ஆகியவற்றுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிடுவோருக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் ஒரு அட்டகாசமான சாய்ஸ்.
வரி விலக்கு
வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 80CCD(1), 80CCD(1b) மற்றும் 80CCD(2) ஆகியவற்றின் கீழ் இதற்கு வரி விலக்கு இருக்கிறது. பிரிவு 80C தவிர, அதாவது NPS இல் ரூ. 1.50 லட்சம், அல்லது ரூ. 50,000க்கு மேல் வரி விலக்கு பெற சலுகை உண்டு. இந்தத் திட்டத்தில் ரூ.2 லட்சம் வருமான வரி விலக்கு பெறலாம்.
நன்மைகள்
இந்தத் திட்டத்தை ஆன்லைன் மூலம் கூட தொடங்கலாம். இதில் மூன்று பிரிவுகள் உள்ளன. (Tier 1 and Tier 2. For Tier 1).இதில் முதலீடு செய்ய குறைந்தப்பட்சம் ரூ.500 போதுமாதும். Tier 2-ல் குறைந்தப்பட்சமாக ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம என்பதற்கு எந்த வரையறையும் இல்லை.