PV Sindhu enters final in CWG: 2014 மற்றும் 2018 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  இதனால் இந்தாண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியிலும் பி.வி. சிந்து இந்திய அணிக்காக ஒரு பதக்கத்தினை உறுதி செய்துள்ளார். 


அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யோ ஜிய மின்னை 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்று வருகின்ற்னர். ஜூலை 28-ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் இந்தியாவில் இருந்து 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர்.  


இதில் இந்திய அணி இது வரை 13, தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்கள் வென்றுள்ளது. இதின் இன்று நடைபெற்ற பேட்மிட்டன்  பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சிங்கப்பூரின் வீராங்கனை யோ ஜிய மின்னை 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மொத்தம் 45 நிமிடங்களுக்கு மேலாக நடந்த விறுவிறுப்பான இந்த அரையிறுதிப் போட்டியில் ஆரம்பம் முதலே பி.வி. சிந்து சிறப்பாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடி சிங்கப்பூரின் வீராங்கனை யோ ஜிய மின்னை 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர் நடைபெற்ற 2014 மற்றும் 2018 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு பி.வி. சிந்து பதக்கங்கள் வென்றார். 2014 காமன் வெல்த் போட்டியில் வெண்கலமும், 2018 காமன் வெல்த் போட்டியில்  வெள்ளியும் வென்றார் எனபது குறிப்பிடத் தக்கது. இந்த ஆண்டு நடைபெறும் காமன் வெல்த் போட்டியில் இந்திய அணியின் போட்மிட்டன் சார்பில் இருந்து தங்கம் அல்லது வெள்ளி உறுதி செய்யப்பட்டுள்ளது.