காமன்வெல்த் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இந்திய அணி காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் தங்கம் வென்றதே இல்லை. இந்நிலையில் இன்று இந்திய அணி மீண்டும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் சந்தித்தது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. 


 






இதன்காரணமாக முதல் கால்பாதியில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியினர் அடுத்தடுத்து கோல்களை அடித்து வந்தனர். இதன்காரணமாக முதல் கால்பாதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது கால்பாதியிலும் இந்தியா அணியை ஆஸ்திரேலிய அணி கோல்களாக அடித்து திணறடித்தது. அந்த கால்பாதியில் ஆஸ்திரேலிய அணி மேலும் இரண்டு கோல்களை அடித்தது. இதனால் முதல் பாதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5-0 என முன்னிலை வகித்தது. 


 


மூன்றாவது கால்பாதியில் இந்திய அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. அந்த கால்பாதியில் ஆஸ்திரேலிய அணி மேலும் ஒரு கோலை அடித்தது. இதன்காரணமாக மூன்றாவது கால் பாதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 6-0 என முன்னிலை பெற்றது. நான்காவது கால் பாதியிலும் ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. 


அந்தக் கால்பாதியிலும் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு நிமிடத்திற்குள் ஒரு கோலை அடித்தது.  இந்தப் போட்டியில் கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடிக்கவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7-0 என்ற கணக்கில் இந்திய அணியை பந்தாடியது. அத்துடன் காமன்வெல்த் போட்டிகளின் வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 7வது முறையாக தங்கப்பதக்கத்தையும் வென்றது. இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இதன்மூலம் காமன்வெல்த் ஹாக்கி வரலாற்றில் இந்தியா தன்னுடைய இரண்டாவது வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளது. 


முன்னதாக நேற்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்க போட்டியி இந்திய அணி பங்கேற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஷூட் அவுட் முறையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. அத்துடன் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண