பார்வைபடும் இடங்களிலும் எல்லாம் பதக்கம்... வரிசையாக குவித்து வைத்துள்ள சான்றிதழ் என்று ரோலர்ஸ் சறுக்குப் போட்டியில் சின்ன வயதில் இருந்து சாதித்து சாதனை படைத்துள்ளார் தஞ்சை மாணவி ராஜயோகி (17). அண்மையில் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த தேசிய அளவிலான ரோலர்ஸ் சறுக்குப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்று தஞ்சை தரணியின் புகழ் கொடியை உயர்த்தி உள்ளார்.
 
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை திருமலை நகரை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி தீபா (35). இவரது மகள் ராஜயோகி (17), ஸ்ரீதர் (15). தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ள மாணவி ராஜயோகியின் சாதனை பட்டியல்கள் நீளமோ... நீளம்.


 




சிறு வயது முதல் இந்த மாணவி மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த ரோலர்ஸ் சறுக்குப் போட்டியில் பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளார். தமிழக அளவில் மூன்று போட்டிகளில் தங்கப்பதக்கம், மாவட்ட அளவில் நடந்த பல போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் மற்றும் 3 வெள்ளிப்பதக்கங்களை குவித்துள்ளார். இவர் வென்ற பதக்கங்கள் பார்வைப்படும் இடங்களிலும் எல்லாம் காணப்படுகிறது. சிறுவயதில் தந்தை வாங்கி தந்தை  ரோலர் ஸ்கேட்டிங்கில் விளையாட்டாக ஆரம்பித்த இந்த பயணம் பல வெற்றி பதக்கங்களை குவித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களுக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடந்த தேசிய ரோலர்ஸ் சறுக்கு போட்டியில் மாணவி ராஜயோகி தேசிய அளவில் வெண்கலப் பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். ரோலக்ஸ் சறுக்கு போட்டி மட்டுமின்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பள்ளி அளவில் நடந்த நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களால் தன் வீட்டை நிரப்பி உள்ளார்.





8 வயதில் ஏற்பட்ட ஆர்வம்,  10 வயதில் பயிற்சிக்கு சென்று, 12 வயதில் மாவட்ட அளவில் 4 போட்டிகளில் மூன்று வெள்ளிப்பதக்கம் மற்றும் ஒரு தங்கப்பதக்கம் அள்ள,  மாவட்ட மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்க தந்தையின் ஊக்கமும், தஞ்சை ஸ்கேட்டிங் பயிற்சி சங்க செயலாளர் ராஜூவின் பயிற்சியும் பதக்கத்தையும், சான்றிதழ்களை குவிக்க காரணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு12 தேர்வுக்காக போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தியவர் தனது விருப்பம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தஞ்சை தரணியின் புகழை உயர்த்துவதுதான் என்கிறார்.

தஞ்சை தரணியை சேர்ந்த இந்த மாணவியின் ஸ்கேட்டிங் வெற்றி பயணம் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்று தரும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. கலந்து கொள்ளும் போட்டிகளில் நிச்சயம் ஒரு பதக்கத்தை வென்றெடுத்து வரும் ராஜயோகி கல்லூரியில் சேர்ந்து தன்னுடைய தொடங்குவார்.  அவரது சாதனைக்கு நாங்கள் வி உறுதுணையாக இருப்போம் என்று அவரது தந்தையும், தாயும் உறுதியான குரலில் திட்டவட்டமாக தெரிவித்தனர்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண