Commonwealth 2022:  ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி ஞாயிற்றுக்கிழமை CWG வரலாற்றில் பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். அன்னு ராணி CWG 2022ல் 60 மீட்டர்கள் ஈட்டி எறிந்து வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.  இதற்கிடையில், மற்றொரு போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை ஷில்பா ராணி இந்த போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். 2022 ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். 


காமன்வெல்த் போட்டி மிகவும் பரபரப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டு இருக்கிறது. போட்டி தொடங்கியதில் இருந்து காமன்வெல்த் நாடுகள் பதக்கங்களை பெற தொடர்ந்து முனைப்புடன் விளைடாடி வருகின்றது. போட்டியின் கடைசி நாளுக்கு முந்தைய நாளான இன்று (ஆகஸ்ட், 7) நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கேலசே லீ பார்பர், மக்கென்சி லிட்டில் ஆகியோர் களமிறங்கி ஈட்டி எறிந்தனர். அதேபோல் இந்தியாவின் சார்பில் களமிறங்கிய அன்னு ராணி மற்றும் ஷில்பா ராணி ஆகியோர் மிகவும் சிறப்பாக விளையாடினர். அதேபோல், கனடாவின் சார்பில் எலிசபெத் கிளேடல், தென்னாப்பிரிக்கா சார்பில் ஜோஆனே வானும், நியூசிலாந்தின் டொர்ரி பீட்டர்ஸ் ஆகியோர் பங்கேற்றனர். அதேபோல் வங்காள தேசத்தின் சார்பில், ஷாரூன் டாகோ களமிறங்கினார்.  




மிகவும் பரபரபாக நடந்த இந்த போட்டியில், தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை ஆஸ்திரேலிய அணி வீராங்கனைளே வென்றனர். ஆஸ்திரேலியாவின் கேலசே லீ பார்பர் 64.43 மீட்டருக்கு ஈட்டி எறிந்து முதலிடத்தையும், ஆஸ்திரேலியாவின் மற்றொரு வீராங்கனையான மக்கென்சி லிட்டில் 64.27 மீட்டருக்கு ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தினைப் பெற்றார். 60 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த இந்தியாவின் அன்னு ராணி மூன்றாவது இடத்தினைப் பிடித்து வெண்கலம் வென்றார். இந்தியாவின் காமன்வெல்த் வரலாற்றில் பெண்கள் சார்பில் ஈட்டி எறிதலில் வெல்லப்பட்ட முதல் பதக்கம் அன்னு ராணி வென்ற வெங்கலப் பதக்கம் தான். அன்னு ராணியின் இந்த சாதனையினை இந்திய ரயில்வே நிர்வாகம் பாராட்டி பதிவு ஒன்றினை அதன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண