தன் நடிப்பைத் தாண்டி இன்ஸ்டா புகைப்படங்கள் மூலம் நெட்டிசன்களையும், தமிழ் சினிமா ரசிகர்களையும் திக்குமுக்காட வைத்து வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.


மலையாள சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்து வரும் கே.யூ.மோகனனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகனன்.


 






கடந்த 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான மாளவிகா,  பின்னர், ’நானு மாட்டு வரலக்ஷ்மி’, இந்தியில் பெயாண்ட் த க்ளவுட்ஸ் படங்களில் நடித்தார். தமிழில் ’பேட்ட’ மூலம் அறிமுகமான இவர், விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டின் முன்னணி நாயகியாக உயர்ந்தார்.


சமீபத்தில் மாளவிகா மோகனன் தன் பிறந்த நாளைக் கொண்டாடிய நிலையில், இன்ஸ்டாவாசிகளும், ரசிகர்களும் அவரை வாழ்த்து மழையில் நனையவைத்தனர்.


முன்னதாக தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை மாளவிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அதில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


மாளவிகாவும், விஜய் சேதுபதியும் மாஸ்டர் படத்தில் நடித்ததை அடுத்து, விரைவில் இருவரும் ஜோடியாக இணைந்து நடிக்க உள்ளனரா என பலரும் கமெண்ட் செக்‌ஷனில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






மாளவிகாவின் பிறந்த நாள் விழாவில் நடிகர் கார்த்திக் ஆர்யன், இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பிற பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.