மகளிர் உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிலி வீராங்கனை கோல் அடித்து தனது காதலனுக்கு ப்ரோபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில், பூல் ஏ பிரிவில் முதலிடத்திற்கான போட்டியில் நெதர்லாந்து மற்றும் சிலி பெண்கள் அணிகள் நேருக்கு நேர் மோதினர். பரப்பான இந்த போட்டியில் 3- 1 என்ற கணக்கில் சிலி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது. 


என்னதான் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும் சிலி வீராங்கனை செய்த ஒரு செயல் மைதானத்தில் அனைவரது மனதையும் கவர்ந்தது. நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிலி வீராங்கனை பிரான்சிஸ்கா தலா கோல் அடித்தார். கோல் அடித்ததை தொடர்ந்து அந்த வீராங்கனை நேராக ஓடிச்சென்று தன் காதலனை கட்டிப்பிடித்து தங்களை திருமணம் செய்ய சம்மதம் என்று தெரிவித்துள்ளார். அந்த வீடியோதான் தற்போது சோசியல் மீடியாக்களில் டாப் ட்ரெண்ட். 






நெதர்லாந்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பேசிய தலா, தான் கோல் அடித்தால் தனது காதலனை திருமணம் செய்து கொள்வேன் என்று தனது அணி வீரர்களுடன் போட்டிக்கு முன் பந்தயம் கட்டியதாகவும், தற்போது அந்த ஆசை நிறைவேறியதாகவும் தெரிவித்தார். 


தலா கோல் அடித்த தருணம் :


 



 


இது குறித்து அவர் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், “நெதர்லாந்துக்கு எதிராக ஒரு கோல் அடித்தால் நான் என் காதலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எல்லா பெண்களிடமும் பந்தயம் கட்டினேன். ஆம், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இது எங்களுக்கு ஒரு கனவு மற்றும் ஒவ்வொரு கணமும் ஆச்சரியமாக இருக்கிறது. இது எங்கள் ஹாக்கி வாழ்க்கையில் சிறந்த தருணம்," என்று தெரிவித்தார். 


நெதர்லாந்து அணிக்காக வெல்டன் லிடெவிஜ், ஜான்சன் யிப்பி மற்றும் டி கோடெ இவா ஆகியோர் கோல்களை அடித்தனர். சிலி அணிக்காக பிரான்சிஸ்கா தலா மட்டும் ஒரே ஒரு கோல் அடித்தார். 


மகளிர் உலகக் கோப்பை போட்டி ஏ பிரிவில் நெதர்லாந்து முதலிடத்திலும், சிலி மூன்றாவது இடத்திலும் உள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண