10வது உலகக் கோப்பை செஸ் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரின் வெகு சிறப்பாக நடந்துவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18வயதே ஆன செஸ் தரவரிசையில் 23ஆவது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், உலகின் நம்பர் 1 வீரரான நார்வேவை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்னும் மோதினர். 


முதல் போட்டியில், மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினர். போட்டி தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இரு வீரர்களும் 35 நகர்வுகளுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது.


அதன் பின்னர் இரண்டாவது போட்டி இன்று அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்றது. தொடக்கம் முதல் பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் யார் வெற்றியாளர் என்பது இன்று முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும், மாக்னஸ் கார்ல்சென் வெள்ளை நிற காய்களுடனும் களமிறங்கினர். 


30 நகர்வுகளுக்குப் பின்னர் இந்த போட்டியும் டிராவில் முடிந்தது. இதனால் வெற்றியாளர் யார் என்பதை தீர்மாணிக்கும் டை-ப்ரேக்கர் போட்டி நாளை அதாவது ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.  


இரண்டாவது போட்டியின் முடிவில் பிரக்ஞானந்தாவிடம் 6 பவன், ஒரு பிஷப் மற்றும் குயின் கைவசம் இருந்தது. அதேபோல், மாக்னஸ் கார்ல்சென் வசமும் 6 பவன், ஒரு பிஷப் மற்றும் குயின் கைவசம் இருந்தது. 


 


நாளை என்ன நடக்கும்?


இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிவடைந்தால், வீரருக்கும் 25 நிமிட நேரக் கட்டுப்பாட்டுடன், வியாழன் (நாளை) இரண்டு டை-பிரேக்கர்கள் நடைபெறும். 






இந்த டை-பிரேக்கர்களிலும் முழுமையாக முடிக்க தவறினால், இருவரும் மேலும் இரண்டு டை-பிரேக்கர்களில் விளையாடுவார்கள். ஒவ்வொரு வீரருக்கும் 10 நிமிட நேரக் கட்டுப்பாட்டு வழங்கப்படும். அதனை தொடர்ந்து டை-பிரேக்கர்களுக்கு ஒவ்வொரு வீரருக்கும் 5 நிமிட நேரக் கட்டுப்பாட்டு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் போட்டியில் மாக்னஸ் கார்ல்சென் கருப்பு நிற காய்களுடனும், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினர். போட்டி தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இரு வீரர்களும் 35 நகர்வுகளுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது.




Chess FIDE World Cup 2023 Final: 2வது சுற்றில் கார்ல்சென்- ஐ காலி செய்வாரா பிரக்ஞானந்தா..? இன்றைய சுற்றும் டிரா ஆனால்..? முழு விவரம் உள்ளே!