ஐசிசி ஒருநாள் கிரிக்க்ட் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட்டானபோதும் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஃபகர் ஜமான் நான்கு பந்துகளில் இரண்டு பந்துகள் எடுத்த நிலையில், மூன்றாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு பின்தங்கினார்.  அதேபோல், நேற்றைய போட்டியில் 94 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த இமாம்-உல்-ஹக் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். ஃபகர் ஜமானின் வீழ்ச்சியால் இந்தியாவின் தொடக்க வீரர் சுப்மன் கில் ஐந்தாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். 


ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான முதல் 10 இடங்களில் வேறு எந்த மாற்றமும் இல்லை. பாபர் அசாம் 880 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் ரஸ்ஸி வான் டெர் டுசென் 777 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், இமாம், கில் மற்றும் ஜமான் அடுத்த மூன்று இடங்களிலும் உள்ளனர்.


ஹாரி டெக்டர், டேவிட் வார்னர், குயின்டன் டி காக், விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அடுத்த 5 இடங்களை பிடித்து டாப் 10 தரவரிசைக்குள் இருக்கின்றனர். 


ICC ஒருநாள் பேட்டிங் தரவரிசை


1. பாபர் அசாம் - 880 புள்ளிகள்


2. ரஸ்ஸி வான் டெர் டுசென் - 777 புள்ளிகள்


3. இமாம்-உல்-ஹக் - 752 புள்ளிகள்


4. சுப்மன் கில் - 743 புள்ளிகள்


5. ஃபகார் ஜமான் - 740 புள்ளிகள்


6. ஹாரி டெக்டர் - 726 புள்ளிகள்


7. டேவிட் வார்னர் - 726 புள்ளிகள்


8. குயின்டன் டி காக் - 718 புள்ளிகள்


9. விராட் கோலி - 705 புள்ளிகள்


10. ஸ்டீவ் ஸ்மித் - 702 புள்ளிகள்


இதன்மூலம், ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான முதல் 10 இடங்களுக்குள் இந்திய அணியை சேர்ந்த சுப்மன் கில் மற்றும் விராட் கோலி மட்டுமே உள்ளனர். முன்னதாக, 10வது இடத்தில் இருந்த  ரோஹித் சர்மா டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறினார். 


பந்துவீச்சாளர்கள் தரவரிசை: 


பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தாலும், அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம்,  தரவரிசையில் முஜீப் ஆறாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் , முகமது சிராஜ் மற்றும் மாட் ஹென்றி ஆகியோரை அடுத்த மூன்று இடங்களை பிடித்துள்ளனர். 


டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, ஷாஹீன் அப்ரிடி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முதல் 10 இடங்களைப் பிடித்தனர். இதற்கிடையில், ஆல்-ரவுண்டர்களுக்கான ICC ஒருநாள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை, ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.